உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 31.pdf/212

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அரு

  • தமிழர் மதம்

187

ளாழுக்கங்களை அவ்விரு வருங் கடைப்பிடித்து நடவாமையானும், உயிர்களுக்கு உயிர்களுக்கு முற் பிறவி பிற்பிறவி யுண்மையினையும் ஊ ழ்வினை யுண்மை யினையும் அவர் உடம்படாமையானும், இறைவனது திருவுருவ வழிபாட்டை அவர் மறுத்தலானும் அவரிவருவரும் பண்டைத் தமிழர் மதத்திற்குப் புறம்பாகவே நிற்கவேண் டியவ ராயினா ரென்க.

என்றிதுகாறும் விளக்கிப் போந்தவாற்றால் மிகப் பழைய காலத்திருந்த தமிழரின் முப்பொருட் காள்கையே (முப்பொருட் கொள்கையாவன கடவுள் உயிர் உலகு என்னும் மூன்றையும் பற்றியவை), தி.பி. முதல் நூற் றாண்டிற்குப் பின்னிருந்து இரண்டாய்ப் பிரிந்து சைவம் வைணவம் என்னும் பெயர்களால் இன்றுகாறும் இவ் விந்திய நாடெங்கும் வழங்கிவரும் உண்மை நன்கு புலனாகா நிற்கும். ஒரே முழுமுதற் கடவுளை ஒளிவடிவிற் கண்டு, அதனையே அம்மையப்பரென வைத்து வணங்கி வருதலிற் பல்லாயிர ஆண்டுகளாகக் கடைப்பிடியாய் நின்ற பண்டைத் தமிழர்க்குப் பின் பல்லாயிர ஆண்டுகள் கழித்து, அப் பண்டைத் தமிழரது மரபிலேயே தோன்றிய கௌதம சாக்கியரும் மகாவீரருந் தம் முன்னோர்தங் கால்லா அறத்தினையே எங்கு மெடுத்துப்பேசி, ஆரியரின் களைந்து

காலை

புலையொழுக்கத்தினை வேரறக்

வந்தனராயினும், அவர்க்குப்பின் அவர்பெயர் தாங்கிவந்த பௌத்தருஞ் சமணரும் முழுமுதற் கடவுளுண்மையினை மறுத்து, மக்கள் தாம் பெறுதற்குரிய முதற்பெரும்பயனான கடவுள் வழி பாட்டை இழக்குமாறு செய்து தமிழுலகினைப் பாழ்படுத்தி வந்தமையின், அவ்விருவரும், இறைவன் றிருவருட் டிறத்தாற் றோன்றி யருளின மாணிக்கவாசகராலுந் திருஞான சம்பந்தராலும் முறையே ஒடுக்கப்பட்டு இவ் விந்திய நாட்டின்கட் பெரும்பாலும் இல்லாமலே ஒழிந்து போயினர். எஞ்சி நின்ற பௌத்தர் சமணரிற் சிறு பகுதி யாருந் தமக்கு மேற்பட்ட அறிவும் ஆற்றலும் வாய்ந்த ஒரு முழுமுதற் பொருள் வணக்கத்தைக் கைவிடமாட்டாராய்த், தத்தஞ் சமய முதல்வரான கௌதமபுத்தரையும் மகாவீர ரையுமே கடவுளாக்கி, அவர்க்குத் திருவுருவங்கள் சமைத்து, அவை தம்மை மிக அழகிய மிகப்பெரிய திருக்கோயில்களில் இருத்தி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_31.pdf/212&oldid=1592946" இலிருந்து மீள்விக்கப்பட்டது