உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 31.pdf/211

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

186

  • மறைமலையம் - 31

காட்டி விளக்கப் பட்டிருக்கின்றன. எனவே பௌத்தமத முதலாசிரியரான கௌதம சாக்கியரின் கொள்கை, பண்டைத் தமிழாசிரியரின் கொள்கையுடன் முழுதொத்து நிற்றலின், அதனைத் தமிழர் மதமெனத் தழுவுதற்கண் இழுக்கேதும் அவர்க்குப்பின் பௌத்தமதப் பெயரால் பலரும், முதலாசிரியர் கொள்கைக்கு முழுமாறாய் இல்வழக்கே (சூனியவாதமே) பேசுதலின், அவரது பௌத்த மதத்தைத் தமிழர்மதம் எனக் கூறுதல் ஒருவாற்றானும் ஒவ்வாதென விடுக்க.

தேனும், வெளிவந்தார்

இனி, இங்ஙனமே கௌதம சாக்கியர் காலத்தில் வட நாட்டில் உடனிருந்தவரான மகாவீரரால் ஆக்கப்பட்ட சமண்மதமுங் கொல்லாமை புலாலுண்ணாமையாகிய சைவ சமய ஒழுக்கங்களையே பௌத்தமதத்தினும் பார்க்க மிகவும் உறைப்பாய் எடுத்து வலியுறுத்தி, ஆரிய வேதங்களை இழித்துப் பேசக் காண்டலின், அதுவும் அக்காலத்திற்கு முதன்மையாய் வேண்டிய சைவவொழுக்கத்தை உயர்த் தெடுத்துப் பேசியதே யன்றிக், கடவுள் இல்லையென்றாவது, கடவுளை வழிபடுதல் வீ ணன்றாவது பேசியதில்லை. முதலாசிரியரான மகாவீரர்க்கு

ன்பாடாகாத கொள்கைகளையே, அவர்க்கு நெடுங்காலம் பிற்பட்டு வந்தவரான சமண்சமயத்தவர் கைக்கொண்டு ஒழுகுதலானும், பிற்காலத்துச் சமண்சமயத்தார் கடவுள் வழிபாட்டைக் கைவிட்டுத், தம் முதலாசிரியரான மகா வீரரையே கடவுளாக வைத்து வழிபடுதலானும், இப் பிற்காலத்துச் சமண்மத முந் தமிழர் மதமாதற்கு உரியதல்லாத தாயிற் றென்க.

இனி, இஞ்ஞான்றைத் தமிழ்மக்களில் ஒரு பெரும் பகுதியார் கிறித்துமதத்தினராகவும், மற்றொரு பெரும்பகுதி யார் மகமதுமதத்தினராகவும் வாழ்ந்துவரக் காண்டலின், அவ்விருவரையுந் தமிழர் மதத்தின்கட் சேர்த்துப் பேசுதல் வேண்டுமாலெனின்; ஒரே முழுமுதற் கடவுள் வணக்கத்திற் கடைப்பிடியாய் நிற்றலிற் கிறித்துவரும் மகமதியரும் பண்டைத் தமிழரோடு ஒப்பராயினும், பண்டைத் தமிழர்க்கு இரண்டாவ தாய்ச் சிறந்த கொல்லாமை புலாலுண்ணாமை யென்னும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_31.pdf/211&oldid=1592945" இலிருந்து மீள்விக்கப்பட்டது