உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 31.pdf/210

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழர் மதம்

185

வந்தவர்கள் என்பது, புத்தர் பிறந்த ஞான்று அவர் தம் பெற்றோரான அரசனும் அரசியும் அவரைச் சிவபிரான் கோயிலுக்கு எடுத்துச் சென்று சிவபிரானை வழிபட்ட செய்தி பழைய கல்வெட்டு ஒன்றிற் குறிக்கப்பட்டிருத்தல் கொண்டு நன்கறியக் கிடக்கின்றது. பெளத்த சமய முதல்வரான கௌதம சாக்கியர் சைவ சமயத்திற்கு இன்றியமையா அறங்களான கொல்லாமை’ புலாலுண்ணாமை என்னும் அருளொழுக்கங் கள் தங் காலத்திருந்த ஆரியர்க்கும் அவர் வழிச்சார்ந்தார்க்கும் முதன்மையாக வேண்டியிருந்தமையால், அவற்றை எடுத்து வலியுறுத்தி வந்தனரேயன்றி, அவர் சைவசமயக் கோட் பாட்டிற்குங் கடவுள் வழிபாட்டிற்குஞ் சிறிதும் மாறு பட்டவரா யில்லா மையினாலேதான், அவர் தம் மாணாக்கரில் அவரது திருவுளக் கருத்தின் உண்மை கண்டார் மரபில் வந்த இடைக்காலத்தவர் சிவபிரானையும் அம்மையையும் உடன் வைத்து வணங்கும் முறைகளையுஞ் சேர்த்து மகாயான பௌத்தத்தை உண்டாக்கினர். மாணிக்க வாசகப் பெருமான் காலத்தில், அஃதாவது இற்றைக்கு ஓராயிரத்து எழுநூறு ஆண்டுகளுக்கு முன்னம் இம் மகாயான பௌத்தமே வடக்கே இமயமலைக்கும் அப் பாலிருந்து தெற்கே குமரிமுனைவரையிற் பரவியிருந்த தாகும். இம்மகாயான பௌத்தம் சைவ சமயக் கோட்பாடுகளுடன் பெரிதொத்து நின்றமையால், அதனைத் தழுவி யிருந்த பௌத்த குருமார்க்குஞ் சைவ சமய குரவர்க்கும் ஏதொரு போராட்டமும் நேர்ந்திலது. மற்று, முதலாசிரியர் கொள்கைக்கு மாறாய்க், ‘கடவுளும் இல்லை, உலகமும் இல்லை, உயிர்களும் இல்லை' யெனக் கரையும் ஈனயான பௌத்தமோ இவ்விந்திய நாட்டில் வழங்குதற்கு இடம் பெறாமையின், இலங்கையிற் சென்று ஒடுங்கிற்று; இது கோட்பாடுகளுக்கு மாறாய்க் L இல்வழக்கைப் பின்பற்றிய இலங்கைப் பௌத்த குருமார்களே தில்லைக்குப் போந்து மாணிக்கவாசகரொடு வழக்காடித் தோல்வியுற்றவராவர். இன்னும், இவ்வீனயான மகாயான பௌத்தமத வரலாறுகளுங், காலமும், அவற்றை யாக்கி யோரும், பிறவுமெல்லாம் எமது மாணிக்கவாசகர் வரலாறுங் காலமும் என்னும் நூலில் வலிய சான்றுகளுடன் எடுத்துக்

சைவ

கிடந்தமையின்,

சமயக்

தன்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_31.pdf/210&oldid=1592944" இலிருந்து மீள்விக்கப்பட்டது