உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 31.pdf/209

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

184

மறைமலையம் - 31 -

தடுத்துப் பேசி, அதனைக் கடைப்பிடித்து ஒழுகுதலாலே ம்மை மறுமைப் பயன்களெல்லாம் தாமே வரும் என வற்புறுத்து வரலாயினர். இங்ஙனம் அறவுரை பகர்ந்துவந்த தமிழாசிரியரின் அறிவுமொழிகளே வடமொழியில் 'உபநிடதங் கள்' ஆயின. இன்னும் அவர்களால் அக்காலத்தே யாக்கப்பட்ட நூல்களே 'சாங்கியம்' 'யோகம்' 'நையாயிகம்' 'வைசேடிகம்' எனப் பெயர் பெற்றன. இந்நூல்களெல்லாம் ஆரியர் செய்து போந்த உயிர்க்கொலை வேள்விகளை ஒருமுகமாய் நின்று மறுத்து, அவர் மிக உயர்த்துப் பாராட்டிய இருக்கு, எசுர், சாமம் முதலான ஆரிய வேதங்களை இழித்துப்பேசுதல் காண்க. தமிழாசிரியர் ஆரியமொழியில் ஆக்கிய இம் மெய்யுணர்வு நூல்கள் தோன்றிய பின்னும் ஆரியரின் கொலை புலை யொழுக்கங் குறையாமற் பெருகியே வர, அதனை வேரறக் களைந் தெறிதற்பொருட்டு ஏழையுயிர்களைக் காக்கும் ஏந்தலான இறைவன்றன் றிருவருட் குறிப்பாற் பண்டைத் தமிழர் மரபில் வந்த அரசர் குடியிலே கௌதம சாக்கியர் என்னும் இளவரசர் தோன்றித் தங் கண்முன்னே நடக்கும் ஆரியரின் வேள்விக் கொலையின் கொடுமையினை நினைந்து மனம் பொறாராய்த், தமது அரச வாழ்க்கையினையுந் துறந்து போய், உயிர்களைக் கான்று தின்னாத கொல்லா அறத்தின் மேன்மையினையே எங்கும் எடுத்துச்சொல்லி, ஆரியரின் உயிர்க்கொலை வேள்வியினை அடியோடு ஒழித்தலிற் கடைப்பிடியாய் நின்றார். கௌதம புத்தர் எங்கும் பரப்பி வந்த அறக்கொள்கையே அவரது பெயராற் பிற்காலத்திற் பௌத்த சமயம் என்னும் பெயர் பூண்டு வழங்கலாயிற்று. இத்துணையே யன்றிக், கௌதம புத்தர், முழுமுதற் கடவுளொருவர் இல்லை யென்றாவது, கடவுள் வழிபாடு செய்தல் பயனற்றதென்றாவது தமது அறவுரையில் எங்குங் கூறினாரல்லர். ஒரு காலத்தில் 'வாசெட்டன்' என்னும் பார்ப்பனன் ஒருவன் கௌதம் புத்தர்பாற் போந்து, “பிரமோபாசனை (கடவுள் வழிபாடு) செய்யலாமா? அது செய்தற்கு வழி யாது?" என்று கேட்ட போது, புத்தர் “கடவுள் வழிபாடு செய்யலாம்; அது செய்தற்கு வழி இது.” என்று தமது கொல்லா அறக் கொள்கையினையே விரித்தெடுத்து அவற்கு அறிவுறுத்தி யிருக்கின்றார். மேலுங், கௌதம புத்தரின் முன்னோர்கள் சிவபிரானையே வழிபட்டு

4

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_31.pdf/209&oldid=1592943" இலிருந்து மீள்விக்கப்பட்டது