உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 31.pdf/208

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழர் மதம்

183

இறை

பின்றைத்தமிழர் அனைவரும் இன்றைக்கும் இறைவன் றைவியை அந்நிலையிலேயே வைத்து வாழ்த்தியும் வழுத்தியும் வழிபாடாற்றி வருவதூஉம், உண்மையான் ஆராய்ந்து காணவல்லார் எவராயிருப்பினும் எந்நாட்டவரா யிருப்பினும் எச்சமயத் தவராயிருப்பினும் அவரெல்லாம் மகிழ்ந்தேற்றுத் தாமும் அவ்வழியொழுகிப் பெறற்கரும் பெரும்பயன் பெறக் காட்டும் பெற்றியவாய்த் துலங்கு கின்றனவல்லவோ? தமிழ் முன்னோர் கண்ட இவ்வரும்பே ருண்மைகள், பின்றைக் காலத்திற் சைவம் வைணவம் எனப் பயர் கொண்ட இருமதங்களிலன்றி வேறெவற்றிலுங் காணப்படாமையால், இவ்விரு மதங்களுமே தமிழர் மதமாகுமன்றி, வேறெதுவுந் தமிழர் மதமெனப் பெயர் பெறுதற்குச் சிறிதும் உரிமையுடைய தாகாதென்று கடைப்பிடித் துணர்ந்துகொள்க.

அஃதொக்குமாயினும், ‘பௌத்தம்’ ‘சமணம்’ என்னுஞ் சமயங்களிரண்டும் வடநாட்டகத்திருந்த பழைய தமிழ் மக்களிடையே தோன்றிச் சிறிதேறக்குறைய இரண்டா யிரத் தைந்நூறாண்டுளாக இவ்விந்திய நாட்டில் நிலவிய வைகளே யாதலால், இவையிரண்டையுந் தமிழர் மதம் எனக் கொள்ளாமை என்னையெனின்; பண்டைத் தமிழர் தாம் ஒளிவடிவிற் கண்ட முழுமுதற் கடவுளை அவ்வொளி வடிவில் வைத்து வழிபடு தலையே தமக்கு முதற்பெருங் கொள்கையாக் கொண்டனர்; அதனையடுத்தே கொல்லா அறத்தினைத் தமக்குச்

சிறப்புடையக் கொள்கையாக் கொண்டனர். இவ்விந்திய நாட்டுக்குப் புறம்பேயிருந்த ஆரியர், உணவுக்கும் உறையுளுக்கும் மிக மிடிப்பட்டு இவ்விந்திய நாட்டுட் புகுந்து குடியேறிய போது, தமிழர்க்குப் பெருஞ் செல்வமாயிருந்த மாடு ஆடு குதிரை முதலான தீங்கற்ற மிக்க பயனுடைய விலங்குகளை அவர் அறிந்தும் அறியாமலும் பலவகையாற் கைப்பற்றிக் கொலை புரிந்து, அவற்றின் ஊனை வரைதுறையின்றித் தின்றுஞ், சோமப் பூண்டின் கள்ளைக் பருகியுஞ், சூதாடியுங் களியாட்டிற் காலங்கழித்தனர். அதுகண்டு அருவருப்புக் கொண்ட அஞ்ஞான்றைத் தமிழாசிரியர் சிலர், அவர்க்கும் அவரைப் பின்பற்றிய தமிழரிற் கீழ்மக்கட்கும் அறிவு தெருட்டு தற்பொருட்டுக், கொல்லா அறத்தின் மேன்மையை மிகுத்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_31.pdf/208&oldid=1592942" இலிருந்து மீள்விக்கப்பட்டது