உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 31.pdf/207

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

182

❖ மறைமலையம் - 31

மாந்தருங் கண்கூடாய் அறிந்துவரும் இயல்பினதா யிருத்த லின், இவ்வுண்மையினைக் கண்டு கடைப்பிடித்த தமிழரது கொள்கை, எத்தேயத்துள்ள அறிஞராலும், எச்சமயத்துள்ள சான்றோராலும் விரும்பி ஏற்றுக்கொளற் பாலதேயன்றி விலக்கற்பாலதன்று. அன்றி எவரேனும் இவ்வுண்மையின் அரும்பெருஞ்சிறப்பினை யுணராமை யினாலோ, உணர்ந்துந் தாம் அதனைத் தழுவ லாகரதெனச் செருக்கு தலினாலோ இதனைத் தழுவாதொழிவராயின் அந்தோ! அவர் தமது பிறவிப்பயனை இழந்தாராதல் திண்ணமென்க.

வெப்பதட்பங்களென

நூலார்

இனி, னி, ஆற்றல்களெல்லாம் இரண்டாயே நிலவும் அரும்பேருண்மையினைக் கண்டாற் போலவே, அவ்வாற்றல்களிற் புலனாம் நிறங்களுஞ் சிவப்பும் நீலமும் என இரண்டேயாமெனக் கண்ட மாபெருஞ் சிறப்புந் தமிழ்ப் பழஞ் சான்றோர்க்கே யுரித்தாகும். இவ் வுலகத்தில் எழுவகை நிறங்களும் இவற்றின் கலப்பால் எண்ணிறந்த பல நிறங்களுங் காணப்படினும், இவையெல் லாஞ் சிவப்பும் நீலமும் என்னும் இரண்டிலே சென்றடங்கு மெனவும், மூலமான இவ்விரண்டு நிறங்களும் ஏற்றியுங் குறைந்துங் கலத்தலினாலேயே எண்ணிறந்தனவான நிறங்கள் பலவுங் காணப்படுகின்றன வெனவும் இஞ்ஞான்றை இயற்கைப்பொருள் பெரிதாராய்ந்து முடிவுகட்டி யிருக்கின்றனர். 3இஞ்ஞான்றை இயற்கைப் பொருணூலார் கண்ட இம்முடிபினை, இற்றைக்கு ஐயாயிர ஆண்டுகட்கு முன்னமேயிருந்த நந்தமிழ் முதுமக்கள் கண்டு, எல்லா நிறங்களுக்கும் மூலமான சிவப்பும் நீலமும் என்னும் இந்நிறங்களிரண்டும் இறைவனது சிவப்பு நிறத்தி லிருந்தும், இறைவியின் நீலநிறத்திலிருந்தும் முதன்முதற் றோன்றிப், பின்னர்ப் பருப்பொருண்மாயையில் அவ்விரண் னையும், அவற்றின் கலப்பால் வேறுபல நிறங்களையுந் தோற்று விக்கலான நிகழ்ச்சி உண்மையினையுந் தெற்றெனத் தெரிந்து, அவ்வாற்றாற் சிவப்புநிறமுடைய தீவடிவினனான இறைவனைச் சிவன் சேயோன் எனவும், நீலநிறமுடைய நீர்வடிவினளான இறைவியை மாயோன், மாயோள் எனவும் அழைத்து அவ்விருவரையும் அவர் ஒருங்கு விரவி நிற்கும் அந்நிலையிலேயே வைத்து வழுத்தி வந்ததூஉம், அவர் மரபு பிழையாது அப்பண்டைத் தமிழ் முன்னோர் வழிவந்த

L

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_31.pdf/207&oldid=1592941" இலிருந்து மீள்விக்கப்பட்டது