உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 31.pdf/206

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* தமிழர் மதம்

அல்லால்,

181

உண்டாக்க

தோற்றத்திற்ககும் இயக்கத்திற்குஞ் சூடுங் குளிர்ச்சியும் ஆகிய இருவகை யாற்றல்களும் இன்றியமையாதனவா யிருக்கின்றன வென்று உணர்தல் வேண்டும். வெவ்விய ஆற்றல் வாய்ந்த இறைவனே உளனாயின், அவனது வெம்மை அவிறந்த ஆற்றலுடையதாகலின், அஃது இப்பருப்பொரு ளுலகத்தை எவ்வகையாலும் பயன்படாத மிக நுண்ணிய நிலையிலேயே வைக்கும் உயிர்களுக்குப் பயன் படும் இப்பருவுடம்புகளையும், இவ்வுடம்புகளுக்குக் கட்டாயமாய் வேண்டிய ய பருப்பொரு ளுணவுகளையும் 6 மாட்டாதாகும். இவ்வுலகின்கண் நீரும் நீரின் குளிர்ச்சியும் ஒரு சிறிது மில்லாமல், வெறு நெருப்பும் நெருப்பின் சூடுமே இருக்குமானால் எல்லாம் அந் நெருப்பின் சூட்டில் எரிந்து நுண்ணியவாய்ப் போக எங்கும் வெறு வெட்டவெளியே யிருக்குமன்றி வேறேதேனும் இருக்குமோ? எண்ணிப் பாருங்கள் அல்லது, இங்கு நெருப்பும் நெருப்பின்சூடுஞ் சிறிதுமே யில்லாமல், வெறுந்தண்ணீருந் தண்ணீரின் குளிர்ச்சியுமே எங்கும் இருக்குமானாற், புல்லிய புற்பூண்டுகளேனும் ஏனைச் சிற்றுயிர் களேனும் மாந்தர்களேனும் இங்கிருத்தல் கூடுமோ? எங்கும் வெறும் பனிப்பாறைகளேயன்றி வேறெவையும் இருத்தல் இயலாதே, நெருப்பும் நீரும் ஒருங்கு விரவி யிருத்தலாலன்றோ, இவ்வுலகமும் உலகியற் பொருள்களும் உயிர்வாழ் உடம்புகளும் இங்கு நிலைபேறுற்றுக் காணப்படு கின்றன. அறிவில்லாத நெருப்பும் நீருந் தாமாகவே ஒன்றுகூடி மிக வியக்கத்தக்க நம் உடம்புகளையும், அவ் வுடம்புகளின் வாயிலாக நாம் நுகர்ந்து வரும் இனிய பண்டங்களையும், நம்முடம்புகளும் பண்டங்களும் இருத்தற்கு நிலைக்களனான இவ்வுலகத்தையும் படைத்து வைத்தல் இயலாமையால், எல்லா அறிவும் முதன்மையும் வாய்ந்த றைவனது வெவ்விய ஆற்றலாலும், அவனோடு ஒருங்கு விரவிய இறைவியின் தண்ணிய ஆற்றலாலும் உந்தப்பட்டே, நெருப்பும் நீரும் ஒன்றுகூடி இவ்வுலகத்தையும், உலகத்துப் பல்பொருள் களையும், உயிர்களின் உடம்புகளையுந் தோற்றுவித்து இயக்குகின்றனவென்று கடைப்பிடித்து உணர்தல் வேண்டும். ஒவ்வொரு பொரு ளிலும் ஒவ்வோருடம்பிலும் இறைவன் இறைவியின் வெப்பதட்ப ஆற்றல்கள் கலந்துநின்று அவற்றை நிலைபெறுத்தியும் நிலைமாற்றியும் வரும் நிகழ்ச்சி, எல்லா

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_31.pdf/206&oldid=1592940" இலிருந்து மீள்விக்கப்பட்டது