உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 31.pdf/205

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

180

மறைமலையம் - 31

7

முடித்துக்காட்டப்பட்டிருக்கின்றது. உவில்லியம் ஜேம்ஸ் என்னும் ஆராய்ச்சிவல்ல பேராசிரியர் தாம் நுணுகியாய்ந்து எழுதிய உளநூலில் “ஓவியக்காரர் ஒவ்வொருவருந் தங் கண்ணெதிரே ஒரு தோற்றத்தை வெம்மையுடையதாகவோ அல்லது தண்மையுடைய தாகவோ வண்ணங்களினால் எங்ஙனந் தோன்றச் செய்தல் கூடுமென்பதைத் தமது கருத்தை எந்த வழியாய்த் திருப்பு கிறார்களோ அந்த வழிக்குத் தக்கபடி அறிந்திருக்கிறார்கள் வெப்பம் வாய்ந்ததாகக் காட்டல் வேண்டுமாயின். ஒவ்வொன்றிலிருந்துஞ் சிவப்பு நிற தோன்று தலை அவர் விரைந்து காண்பர்; குளிர்ச்சி யுடையதாகக் காட்டல் வேண்டுமாயின் நீலநிறந் தோன்று தலை அங்ஙனமே அவர் விரைந்து காண்பர்” என ஓரிடத்தும், “வெளிறின நீல நிறம் பெண்டன்மையோடு உறவுடையதாகவுஞ், செங்குருதி நிறம் ஆண்டன்மையோடு உறவுடையதாகவுங் கூறப்படுங்கால் முடிவில் அஃதுண்மை யாகவே ஒரு திகைப்பினை யுண்டாக்கு கின்றது”2 என மற்றோரிடத்தும் எடுத்துரைத்தலாற், செந்நிற நீலநிறங்கள் முறையே வெப்ப தட்பங்கட்கும் ஆண்மை பெண்மை கட்கும் மெய்யாகவே உரியவாதல் தெற்றென விளங்கா நிற்கும். எனவே, ஒளியுருவாய் எங்கும் விளங்கும் இறைவன் எல்லையற்ற வெவ்விய ஆற்றல் வாய்ந்தவ னாகலின் சிவந்த நிறத்தினனாய்த் திகழ்தலுடன், தன்கண் அடங்கித் தோன்றுந் தண்ணிய ஆற்றலால் நீலநிறம் உ டைய அம்மையையும் ஒருபாற் பெற்றவனாய் நிற்கும் உண்மை, ஆராய்ச்சியறிவு முதிர்ந்த நல்லாசிரியர் எந்நாட்டவரா யிருப்பினும் எச்சமயத்தகவராயிருப்பினும் அவர்க் கெல்லாம் ஒப்ப முடிந்ததொரு கொள்கையே யாதல் நன்கு பெறப்படுதல்

காண்க.

இனி, உலகத்திலுள்ள ஆற்றலெல்லாஞ்

சூடுங்

குளிர்ச்சியும் என்னும் இரண்டில் வந்தடங்குமெனக் கண்டு, அவ்வுண்மையிற் கடைப்பிடியாய் நின்ற தமிழரது கொள்கையே,

ஞ்ஞான்றை இயற்கைப் பொருள் நூலார்க் கெல்லாம் ஒத்தமுடிபாய் இருக்கின்றது. 'இவ்வுலகிற் சூடு மட்டுமே யிருந்தால் உலகம் என்னும் பொருளும் பெயருமே இல்லையாய்ப்போம்; அல்லது குளிர்ச்சி மட்டுமே யிருந்தாலும், அதைத் தவிர வேறெவையுமே ரா. ஆகவே, உலகத்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_31.pdf/205&oldid=1592939" இலிருந்து மீள்விக்கப்பட்டது