உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 31.pdf/204

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழர் மதம்

179

பாட்டுகளிலோ சிவபிரானைப் பழித்துரைக்கும் பழிப்புரைகள் மலிந்து கிடக்கின்றன. இவற்றின் விரிவெல்லாம் எமது மாணிக்கவாசகர் வரலாறுங் காலமும் என்னும் பெருநூலிற் றக்க சான்றுகளுடன் காட்டப்பட்டிருத்தலின் அவற்றை அங்கே கண்டு கொள்க. இவ்வாறாகத் தமிழர்க்குட் பண்டை நாளில் ஒன்றாயிருந்த கடவுட்கொள்கை பின்னர் இரண்டாய தூஉம், அவ் விரண்டுந் தி.பி. முதல் நூற்றாண்டிலிருந்து, சைவம், வைணவம் எனப் பெயர் பெறலாயதூஉம், பின்னர்த் தி.பி. எட்டாம் ம் நூற்றாண்டிலிருந்து பார்ப்பனர் தமிழரைச் சீர்குலைத்தற் பொருட்டு வடமொழியிற் கட்டிவிட்ட புராணப் புரட்டுக் கதைகளால் அவ்விருசமயத்தாருந் தமக்குட் பெரும் பகைமை கொண்டு கலாய்க்கலாயதூஉம் வந்த வரலாறு கண்டு கொள்க.

6

இங்ஙனந் தமிழரது உயர்ந்த ஒரு முழுமுதற் கடவுளின் விழுமிய கொள்கை மெய்யுணர்விழப்பினாலும், ஆராய்ச்சி யறிவின்மையாலும், பார்ப்பனச் சூழ்ச்சியாலும் பலவாறு சிதைந்து போயினும், ஆராய்ச்சியறிவு மிக்க நமது சிறந்த ஆங்கில அரசின்கீழ் அது மீண்டுந் தன் பழஞ்சிறப்பினை எய்திக் கதிரவனொளியென வீறித் திகழும் பெற்றியதாதலை ஒரு சிறிது விளக்குவாம். ஒளியையே கடவுளெனக் கண்டு, அவ்வொளியிற் றோன்றிய செவ்வொளியினை அப்பனாக வும் அதிற்றோன்றிய நீலவொளியினை அம்மையாகவுந் துணிந்து கடவுள் வழிபாடு செய்துபோந்த தமிழ் முன்னோர் கொள்கை, இஞ்ஞான்று அரிய பெரிய ஆராய்ச்சி செய்யும் மேனாட்டாசிரியரின் ஆராய்ச்சி முடிபுக்கும், இறைவன் உண்டென்னும் ஏனை யெல்லாச் சமய முடிபுக்கும் பெரிதும் ஒத்ததாகவே கிளர்ந்து நிற்கின்றது. உயிர்களின் பிறவி யெல்லாம் ஆண்பெண் என்னும் இரு பகுதியிலும், ஆற்றலெல்லாம் வெப்பம் தட்பம் என்னும் இருவகை யாற்றலிலும், பொருள்களெல்லாம் நெருப்புந் தண்ணீரும் என்னும் இருபெரும் பகுப்பிலும், நிறங் களெல்லாஞ் சிவப்பும் நீலமும் என்னும் இருவேறு நிறங்களிலும் அடங்கி நிற்கின்றன. வெம்மை மிகுந்த நெருப்பு ஆண்டன்மை யிலுந், தண்மை மிகுந்த நீர் பெண்டன்மையிலும், வெம்மை யுள்ள நெருப்பு சிவந்த நிறத்திலுந், தண்மையுள்ள நீர் நீல நிறத்திலும் புலனாய்த் தோன்றல் ஆராய்ச்சி வல்ல ஆசிரியரால்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_31.pdf/204&oldid=1592938" இலிருந்து மீள்விக்கப்பட்டது