உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 31.pdf/203

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

178

எனவும்,

மறைமலையம் - 31

“தாழ்சடையும் நீண்முடியும் ஒண்மழுவுஞ் சக்கரமுஞ் சூழரவும் பொன்நாணுந் தோன்றுமால்-சூழுந் திரண்டருவி பாயுந் திருமலைமேல் எந்தைக்கு இரண்டுருவும் ஒன்றாய் இசைந்து”

எனவும் முறையே அருளிச் செய்திருத்தலாலும் நன்கு தெளியப்படும்.

இங்ஙனமாகச், சைவசமயாசிரியரும் வைணவ சமய ஆழ்வார் முதலிவருவரும் வயங்கிய தி.பி. (கி.பி.) எட்டாம் நூற்றாண்டு வரையிலுஞ் சைவத்திற்கும் வைணவத்திற்கும் மாறுபாடு பெரிதுமில்லையாய், இருசமயத் தெய்வங்களும் அவ்விரு சமயத்தவராலும் வணங்கப்பட்டு வந்திருக்க,

க்கிருந்து வந்து குடியேறிய திராவிட ஆரியப் பார்ப்பனரும், அவருடன் கலந்துகொண்ட தமிழ்ப் பார்ப்பனரும் ஒருங்கு சேர்ந்து, தமிழ் மக்களின் ஒற்றுமை யைச் சிதைத்து, அவரைத் தமக்கு அடிமைகளாக்கிக் கொள்ளுந் தீய எண்ணமே தலைக் கேறித் தமிழ்ப் பொது மக்களுக்குத் தெரியாத சமஸ்கிருதம் என்னும் இறந்து பட்ட வடமொழியைத் தமக்கே உரியதாக்கிக் காண்டு, பிறவியே யில்லாத முழுமுதற் கடவுளாகிய திருமாலுக்குப் பல பிறவிகளைக் கற்பித்துப், பொய்யும் புனை சுருட்டும் நிரம்பத் தாம் அம்மொழியிற் கட்டிவிட்ட புராணக் கதைகளில் திருமாலின் பிறவிகளை உயர்த்திச், சிவபிரானை மக்களினுங் கடைப்பட்டவராகத் தாழ்த்தி, வைணவர்க்கு முற்காலத்திலில்லாத வெண்மண் செம்மண் குறியையும் அவரது நெற்றியிற் றீட்டி, இவ்வாற்றால், வைணவர் சைவரொடு பெரிதும் இகலிக் கலாம் விளைக்குமாறு செய்து விட்டனர். பார்ப்பனர் செய்த இச்சூழ்ச்சியின் திறன், அவரது சூழ்ச்சிக்கு முற்பட்ட பொய்கையாழ்வார் பேயாழ்வார் பாடலையும், அவரது சூழ்ச்சிக்குப் பிற்பட்டு அதிற் சிக்குண்ட ஏனை யாழ்வாரின் பாடல்களையும் புடைபட வைத்து ஒத்து ன நோக்குதலால் நன்கு விளங்கும். பொய்கை யாழ்வார் பேயாழ்வார் பாடல்களிற் சிவபிரானை இகழும் இழிப்புரைகள் சிறிதுங் காணப்படா; மற்றுத் திருமங்கை யாழ்வார் திருமழிசை யாழ்வார், நம்மாழ்வார் முதலான பிற்காலத்தவர்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_31.pdf/203&oldid=1592936" இலிருந்து மீள்விக்கப்பட்டது