உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 31.pdf/202

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழர் மதம்

எந்நிறத்த ளாயிருப்பள் எங்கள் சிவபதியும் அந்நிறத்த னாயிருப்பன் ஆங்கு"

177

என அண்ணலையும் அம்மையையும் ஏற்றத்தாழ்வின்றி ஒரு நிலைப்பட வைத்து வலியுறுத்திக் கூறுமாற்றால் தெளியப்படும்.

ஆகவே, அம்மையை வணங்கி வந்த தமிழ்ப் பழமக்கள் வரவர மெய்யுணர்விழந்து அவளைத் திருமாலாக்கி வணங்கி வரினும், அப்பனை வணங்கினார்க்கும் அவர்க்கும் மிகுதியான பகைமை நெடுங்காலம் வரையில் நிகழாமை யால், அவ் விருவகைக் குழுவினரில் ஒருவர் தம்மைச் சைவர் எனவும், மற்றொருவர் தம்மை வைணவரெனவும் வேறு படுத்தி வழங்கிக் கொண்டாலுஞ் சைவர் திருமாலை வணங்கவும், வைணவர் சிவபிரானை வணங்கவும் பின் வாங்கிற்றிலர்; ஏனெனிற், சிவபிரானுந் திருமாலும் ஒருவரே யென்னும் பண்டைத் தமிழர்தங் கொள்கை, அவர்தங் கால்வழியில் வந்தவரான பின்றைத் தமிழர்தம் நினைவை விட்டு அகலாமையின், இது தமிழ்ப் பொது மக்கள், “அரியுஞ்சிவனும் ஒண்ணு அறியார் வாயில் மண்ணு” எனத் தமக்குள் வழங்கிவரும் பழமொழி யாலும் நன்குணரப்படும். இங்ஙனமாகப் பண்டைத்தமிழர் தங் கொள்கை ‘சைவம்' 'வைணவம்' என இருவேறு தெய்வக் கொள்கையாகப் பிரியினும், அவற்றைக் கைக்கொண்டோர் தமக்குட் பகைமையும் மாறுபாடு மிலராய்ச் சிவ பிரானையுந் திருமலையும் வேற்றுமையின்றியே வைத்து நெடுங்காலம் வரையில் வழிபாடு சய்து வந்தனர்.

இது,

சமயாசிரியராகிய திருஞான சம்பந்தரும் அப்பரும்,

“ஊறினார் ஓசையுள் ஒன்றினார் ஒன்றிமால் கூறனார்"

எனவும்,

“அரியலாற் றேவியில்லை ஐயன் ஐயாறனார்க்கே”

சைவ

எனவும் முறையே அருளிச் செய்திருத்தலாலும், வைணவ சமயமுதலாழ்வார்களான பொய்கையாரும் பேயாரும்,

“பொன்றிகழும் மேனிப் புரிசடையம் புண்ணியனும்

நின்றுலகந் தாய் நெடுமாலும் - என்றும்

இருவரங்கத் தாற்றரிவ ரேனும் ஒருவன்

ஒருவனங்கத் தென்றும் உளன்'

و,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_31.pdf/202&oldid=1592935" இலிருந்து மீள்விக்கப்பட்டது