உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 31.pdf/201

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

176

மறைமலையம் - 31

வருப்புள்ளனவாயிருக்க, அவற்றுள் ஆண் உடம்பை உயர்ந்த தன்றும் பெண்ணுடம்பைத் தாழ்ந்ததென்றுங் கூறுதல் எத்துணை அறியாமையுடையதா யிருக்கின்றது! அருவருப்புள்ள ஆண்பெண் உடம்புகளுள்ளுஞ் சிற்சில வுடம்புகள் அவ் வருவருப்பை மாற்றி விழைவூட்டும் அழகும் மணமும் வாய்ந்தன வாயிருத்தலும், பெரும்பாலும் பெண் மக்களுடம்பு ஆண் மக்களினுடம்பைவிடத் தூயனவாய் நோய் ஒட்டாதனவா யிருத்தலும் எமது சிவஞானபோத ஆராய்ச்சியில் வரிவாய்க் காட்டி விளக்கியிருக்கின்றேம். இந்நூலிலும் மேலே சிறிது அவை விளக்கப் பட்டிருக் கின்றன. உயர்வுதாழ்வுக்கு இடமான ஊனுடம்புகளிலேயே, பெண் பிறவி சிறந்ததென்பது பெறப் படுவதாயிருக்க, அவ் வாறுயர்வு தாழ்வு கருதற்குச் சிறிதும் இடந்தராத ஒளியுடம்புகளிற் சிவத்தினுருவை உயர்ந்த தென்றும், அம்மையினுருவைத் தாழ்ந்ததென்றும் பிழைபடக் கருதல் எத்துணை மடமை!

இனி, மக்களுள்ளேயே பெண்மக்கள் அறிவாற்றல் களில் ஆண்மக்களுக்குச் சிறிதுங் குறைந்தவரல்லர். இது, பழைய கழக இலக்கியங்களில் ஒளவையார், காக்கைபாடினி நச்செள்ளை யார், பெருங்கோப்பெண்டு, வெண்ணிக் குயத்தியார் முதலான செந்தமிழ்ப் புலமை மாதரார் பாடியிருக்கும் அருந்தமிழ்ப் பாடல்களையும், அவர்க்குப் பின் காரைக்காலம்மையார் இறைவன் மேல் அன்பிற் குழைந்துருகிப் பாடியருளிய செய்யுள் நூல்களையும் ஒருசிறிது நோக்குவார்க்குந் தெற்றெனப் புலப்படும். மக்களுள்ளேயே பெண்பாலார் அறிவாற்றல்களில் எந்தவகையிலும் ஆண்பாலார்க்குக் குறைந்தவரா யில் லாமை தெளியக் கிடக்கையில், எல்லாம்வல்ல இறைவி யாகிய உமையம்மை மட்டுஞ் சிவபிரானுக்கு எந்தவகையி லேனுங் குறைந்தாள் ஆய்விடுவளோ? ஆகாளன்றே; அன்றாகவே, றைவியாகிய உமை இறைவனோ இறைவனோடொத்த தூய்மையும் அறிவாற்றல்களும் உடைய ளென்பதே பண்டைத் தமிழ் முன்னோர் கொண்ட கொள்கையாகு மென்று கடைப்பிடிக்க. து, சைவசித்தாந்தப் பழ நூலாகிய திருக்களிற்றுப்படியார், “பொன்னிறங் கட்டியினும் பூணினும் நின்றாற்போல் அந்நிறம் அண்ணலும் அம்பிகையுஞ் - செந்நிறத்தள்

6

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_31.pdf/201&oldid=1592934" இலிருந்து மீள்விக்கப்பட்டது