உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 31.pdf/200

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* தமிழர் மதம்

175

பெண்வடிவில் வைத்து வழிபாடு புரிதல் தமக்கு இழிவெனக் கருதி அம்மையையும் அப்பனாக்கி அவற்கு மாயோன், திருமால் என்னும் பெயர்களைப் புனைந்து விடலாயினர். கடவுளைப் பெண் பாலாக வைத்து வணங்குதல் குறைவெனக் கருதியவரில், வடக்கிருந்த தமிழரைவிடத் தெற்கிருந்த தமிழரே முன் நின்றவர் என்பதற்குத், தென்றமிழ் நாட்டில் இன்றைக்குந் திருமால் கோயில்கள் மிகுதியாய்க் காணப்படுமாறு போல் வடநாட்டின் கட் காணப்படாமையும், வடநாட்டின்கண் அம்மையாகிய கொற்றவை (துர்க்கை)யின் கோயில்களே நகரங்கடோறும், அந்நகரங்களில் தெருக்களில்

தெருக்கடோறும், அத்

வீடுகாே ாறும் நிறைந்து காணப்படுதலுமே உறுபெருஞ் சான்றாம். அம்மை அங்ஙனம் ஆண்வடிவாகத் திரிக்கப் பட்டாலும், உண்மையிலே திருமால் பெண்பாலே யென்பது, அவர் ‘பெருமான்' என்னும் ஆண்பாற் சொல்லால் வழங்கப் படாமற் ‘பெருமாள்' என்னும் பெண்பாற் சொல்லால் வழங்கப் படலாலுந், திருமால் 'மோகினி' என்னும் பெண்வடிவெடுத்துச் சிவபிரானைக் கூடிச் 'சாத்தனைப்' பெற்றார் என்னும் புராண கதையாலும், அவர் உமைப்பிராட்டியாருக்குத் தமையன் என்னும் வழக்காலும், அவர் அம்மையைப் போலவே நீலநிறம் வாய்ந்தவராயிருத்தலாலும், சிவந்தநிறம் நெருப்பிற்குரிய தாய் ஆண்டன்மையைக் காட்டுமாறு போல நீலநிறம் நீருக்குரிய தாய்க் குளிர்ந்த அருளினதான பெண்டன் மையைக் காட்டு தலாலும் ஐயுறவின்றித் துணியப்படும்.

அற்றேல், ஆண்வடிவான சிவத்தினும் பெண்வடிவான அம்மை குறைந்தவளாவளே யெனின்; அஃது ஆராய்ச்சியறி வில்லார் கூற்றாம். ஒளிவடிவில் எது குறைந்தது? எது சிறந்தது? பருப்பொருள்களினுள்ளுந் தூயவான செம்மணி (இரத்தினம்) நீலமணியில் உருவாக்கிய ஆண்பெண்பாவை களிலும், பொன் வெள்ளி முதலியவற்றிற் றிரட்டிய ஆண் பெண்பாவைகளிலும் எதனை உயர்ந்ததென்று சொல்லலாம்? எதனைத் தாழ்ந்த தென்று சொல்லலாம்? என்புந் தோலும் நரம்பும் ஊனுங் குருதியுஞ் சேர்ந்து திரண்ட நம்மக்களுடம்பே அருவருக்கத்தக்க மலப் பாண்டமா யிருக்கின்றதன்றி, இறைவன் இறைவியின் ஒளியுடம்பும் அவ்வாறு அருவருக்கத்தக்க இயல்பினதா யிருத்தல் கூடுமோ? மேலும், மக்களுடம்பெல்லாம் அரு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_31.pdf/200&oldid=1592933" இலிருந்து மீள்விக்கப்பட்டது