உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 31.pdf/199

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

174

21. சைவ வைணவம்

இனி, முன்னாளிருந்த தமிழர் அனைவரும்

றைவனை ஒளியுருவில் வைத்து வழிபாடு செய்யும் ஒரே கொள்கை யினராக இருந்தமையின், அவருள் எவ்வகையான மதப் பிரிவும் இருந்திலது; அதனால், மதம் என்னுஞ் சொல்லே அவர்க்குள் வழங்கவில்லை யென்பது முன்னமே விளக்கிக் காட்டப்பட்டது. வடநாட்டிலிருந்த பெளத்த சமண்மதங்களுந் திராவி ஆரியரின் பல திறக்கொள்கைகளுந் தென்றமிழ் நாட்டிற் குடிபுகுந்து நிலைபெறத் துவங்கிய பிறகே, அஃதாவது ஆசிரியர் திருவள்ளுவர் காலத்திற்கு ஒரு நூற்றாண்டு கழிந்த பிறகே, கி.பி. இரண்டாம் நூற்றாண்டின் துவக்கத்திலிருந்து அஞ்ஞான் றிருந்த பல திறக்கொள்கைகளும் பல திறப்பெயர்களால் வழங்கத் துவங்கிய பான்மையும் முன்னரே காட்டப்பட்டது. இறைவன் வடிவு நங் கட்புலனெதிரே காணப்படும் ஒளி வடிவேயென்பது மேற்செய்த உண்மை யாராய்ச்சியிற் பெறப்பட்டமையால், தீக்கொழுந்திற் காணப்படுஞ் செவ்வொளியே முக்கட் பெருமானாகவும், அவ்வொளியில் அடங்கிச் சிறிதே தோன்றும் நீலவொளியே உமையம்மை யாகவும் வைத்து வணங்கப்பட்டன. நீண்டகாலம் வரையில் அப்பனையும் அம்மையையும் அவர் பிரிவின்றி நிற்கும் நிலை யிலேயே வைத்து வணங்கிவந்த பண்டைத் தமிழர், பின்னர் இருவேறு வகையினராய்ப் பிரிந்து அப்பனையே வணங்குவோர் மற்றொரு குழுவினராயும் நிலைபெறலாயினர். இவ்விரு வேறு குழுவினரில் அப்பனை வணங்குவோர், அம்மையை வணங்கு வோரையும், அம்மையை வணங்குவோர், அப்பனை வணங்கு வோரையும் இழித்துப் பேசிக்கலாம் விளைக்கலாயினர். இக்கொள்கைப் போரில் இரு குழுவினரும் பெண்பிறவியைக் குறைவாகக் கருதவும் பேசவுந் துவங்கவே, அம்மையை வணங்கிய குழுவாரில் ஒரு பெரும் பகுதியார் கடவுளைப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_31.pdf/199&oldid=1592932" இலிருந்து மீள்விக்கப்பட்டது