உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 31.pdf/215

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

190

22. தமிழர்தந் திருக்கோயில்கள்

.

இனி, ஒளிவடிவே முழுமுதற்கடவுளின் அருள்வடி வாதலை நன்கு கண்ட பண்டைத் தமிழர் அக்கடவுளின் அருள் வடிவை வைத்து வழிபடுதற்கு அமைத்த திருக் கோயில்களின் வரலாற்றைச் சிறிதெடுத்துக் கூறுவாம். பழைய தமிழ் முன்னோர் ஒளிவடிவே இறைவன் வடிவென உணர்ந்தபின், பகற்காலத்தே பேரொளிப் பிழம்பாய்த் துலங்கா நின்ற கதிரவனையே கடவுளாகக் கருதி வழிபட்டு வரலானார். இது வடமொழி யிருக்கு வேதத்திற் பகலவன் வணக்கத்தின் மேலதான காயத்திரி மந்திரமே மிகச் சிறந்த வழிபாட்டுரை யாய்த் திகழ்தலாலும், அம் மந்திரத்தினையே காலை நண்பகல் மாலை என்னும் மூன்று பொழுதுகளிலும் அந்தணரெல்லாரும் பற்பலகாலுஞ் சொல்லி இன்றுகாறும் வழிபாடியற்றிவரக் காண்டலாலும், அக்காயத்திரி மந்திரத்திற் பர்க்கன் என்னும் பெயரால் விளிக்கப்படுவோன் விளிக்கப்படுவோன் சிவபிரானே யென்பது மைத்திராயணீ யோபநிடதத்திலும் அமரநிகண்டிலும் நன்கெடுத்துத் தெளிவுறுத்தப்பட்டிருத்த லாலும், அதற் கிணங்கவே சைவ சமயாசிரியரான திருநாவுக்கரசு நாயனாரும்,

“அருக்கன் பாதம் வணங்குவர் அந்தியில்

அருக்க னாவான் அரனுரு வல்லனோ? ன்

இருக்கு நான்மறை ஈசனை யேதொழுங்

கருத்தி னைநினை யார்கன் மனவரே”

என்றருளிச் செய்திருத்தலாலுந் தெற்றென அறியப் படும்.

அஃதொக்கும், ஆரியவேதத்திற் போந்த கதிரவன் வணக்கத்தைப் பண்டைத் தமிழர்க்குரிய தொன்றாகக் கூறுதல் யாங்ஙனமெனின்; ஆரிய வேதமான இருக்கு வேதத்தில் உள்ள பதிகங்கள் அத்தனையும் ஆரிய மாந்தராலேயே ஆக்கப்பட்டன

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_31.pdf/215&oldid=1592949" இலிருந்து மீள்விக்கப்பட்டது