உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 31.pdf/216

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அல்ல;

  • தமிழர் மதம்

இந்திரன் வருணன் முதலான தம்

191

படைத்

தலைவர்களின் ஆவிகண்மேல் ஆரியர் பாடிக் கொணர்ந்த பாட்டுகளை, அவர்களைச்சீர்திருத்தல் வேண்டி அவருடன் ஒருங்கு சேர்ந்து நின்று ஒரு கோவைப் படுத்தி அவற்றிற்கு இருக்குவேதம்' எனப்பெயருந் தந்த பண்டைத் தமிழாசிரியரே தாம் வணங்கிப் போந்த பகலவன் மேலும், அப் பகலவனுக்கு உயிரான சிவபிரான் மேலுந் தாம் பாடிய பதிகங்களையும் அவ் விருக்கு வேதத்தின் இடையிடையே சேர்த்து அவற்றை ஒரொ ழுங்கு படுத்திய வாய்மையினை இந்நூலின்கண் முன்னமே சிறிது எடுத்துக்காட்டி யிருக்கின்றேம். இதற்குமுன் எமது மாணிக்கவாசகர் வரலாறுங் காலமும் என்னும் பெருநூலினும் அதனை விரித்து விளக்கியிருக்கின்றேம். காயத்திரி மந்திரத்தை இயற்றி இருக்கு வேதத்திற் சேர்த்து, அவ் வேதத்திற்கு உயிரும் உயர்வுங் கொடுத்தவர் விசுவாமித்திரர் என்னுந் தமிழ்ப் பரதகுல அரசமுனிவரே யாதல் கருத்திற் பதிக்கற்பாற்று.

இனிப், பேரொளிப் பிழம்பான பகலவனை இறைவனுரு வாகக் கண்டு வணங்கி வந்த பண்டைத் தமிழர், நாளேற நாளேற அவன்பால் அன்பு மீதூரப் பெற்று, அதனால் அவனை எட்டாத் தொலைவில் வைத்து வழிபடுதலில் மனநிறைவு பெறாராய், அவன்போன்ற ஓர் ஒளியுருவினைத் தமதெதிரே நிறுத்தி வழுத்துதற்குப் பெருவிழைவு கொண்டனர். தம்மால் அன்புசெய்யப் பட்டாரை அருகே வைத்துக் காணவும். அவர்க்கு மலர் மாலை சூட்டுதல் முதலான சிறப்புகளைச் செய்து, அவருடைய காலடிகளில் வீழ்ந்து வணங்கி அவரை வாழ்த்தவும் மிக விரும்புவது, மக்களில் மிக உயர்ந்தாரி லிருந்து மிக இழிந்தார் வரையிலுள்ள எல்லாரிடத்தும் இயற்கையாய்க் காணப்படுகின்றது. ஆகவே, பகலவனை யொப்பதோர் ஒளியுருவினைத் தம்மெதிரே நிறுத்தித், தாம் வேண்டிய சிறப்புகளை யெல்லாம் அதற்குச் செய்து அதனைப் பழந்தமிழர் வழிபட விழைந்ததில் இயற்கைக்கு, மாறானதேதும் அவர்பால் ல்லையென்றுணர்ந்து அங்ஙனம் விழைவு காண்டு, அதற்கேற்றதோர் ஒளியுருவினை அவர் தேடப் புகுந்த காலத்திலெல்லாம், அவர் மரக்கட்டைக ளிரண்டை ஒன்றோடொன்று தேய்த்து நெருப்பினை யுண்டாக்கி அதனாற் பச்சை யுணவுப் பண்டங்களைப் பதமாக்கிச் சமைத்துண்ணவும்,

கொள்க.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_31.pdf/216&oldid=1592950" இலிருந்து மீள்விக்கப்பட்டது