உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 31.pdf/217

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

192

மறைமலையம் - 31

அதனொளியால் இருள் செறிந்த இராப் பொழுதில் நச்சுயிர் கட்குங் கொலை விலங்குட்கும் அஞ்சாது அகன்றொழுகவுந் தெரிந்து கொண்டார்களாதலால், அத்தகைய நெருப்பின் ஒளியுருவினையே தமக்கு அண்மையில் வைத்து மனக் களிப்புடன் வணங்குதற்குத் தலைப்பட்டனர். நந் தமிழ் முன்னோர் இரண்டு மரக்கட்டைகளைத் தேய்த்தே மிகப் பழைய காலத்தில் நெருப்பினை உண்டாக்கி வந்தன ரென்பது, "ஞெலிகோற் கொண்ட பெருவிறன் ஞெகிழிச் செந்தீத் தொட்ட கருந்துளைக் குழலின் இன்றீம் பாலை முனையின்"

என்று பெரும்பாணாற்றுப்படையில் அதனாசிரியர் கடியலூர் உருத்திரங்கண்ணனார் கூறுமாற்றால் நன்கறியப்படும். ஞெலிகோல்' என்பது தீக்கடைகோல். இன்றைக்கும் வேள்வி வேட்கும் ஆசிரியர் முதலிற் றீக்கடை கோல் கொண்டே தீயை யுண்டாக்கி வேள்வியைத் தொடங்கு மாற்றால், இது மிகப் பழைய காலத்தே தமிழர்க்குள் ளிருந்த தொரு பழக்கமாதல் அறியக்கிடக்கின்றது. பெரும்பாலும் அப்பண்டை நாளிற் பெரிய பெரிய மரநீழல்களில் வட்ட மான ஒரு குழி அகழ்ந்து, அதிற் றீயை வளர்த்து, அத் தீச்சுடர்க்கு நெற் பொரியும் மலருந் தூவி அதனையே மிக மனங்கரைந்து வழி மட்டு வந்தனர் நந் தமிழ் முன்னோர். பின்னர் நாட்செல்லச் செல்ல அத் திருவுருவின் பாற் பின்னும் பின்னும் அன்பு பெருகப் பெற்று, அதனைத் தொடுதற்கும், அதற்கு நீராட்டுதற்கும், அதற்கு மலர்மாலை சூட்டிப் பார்த்தற்கும் பெரிதும் அவர் விரும்ப லாயினர். ஆனால், தீயோ தொட்டாற் சுடுவதா யிருத்தலுடன், கையிற் பிடிபடாத தாயும் நீராட்டுதற்கும் மலர் மாலை யணிந்து பார்த்தற்கும் இடந்தராத நுண்ணிய இயல்பினதாயும் இருத்தல் கண்டு, அத்தீச்சுடரை ஒப்பதோர் உருவினைத் தாந்தொடுதற் கேற்றதொரு பொருளிற் சமைத்தற்குக் கருதி, அதனைக் கருங்கல்லில் அமைத்தற்குப் புகுந்தார்; புகுந்து தீவளர்க்குங் குழியை ஒப்பதான ஒரு வட்ட வடிவையும், அக்குழியில் நீண்டு குவிந்து வளர்ந்தெரியுந் தீச்சுடரை 6 ஒப்பதான நீண்டு குவிந்ததொரு குழவி வடிவையும் அக் கருங்கல்லிற் சமைத்துப், பின் நீண்டு குவிந்த அக் குழவிவடிவை வட்ட வடிவிற் கோத்து

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_31.pdf/217&oldid=1592951" இலிருந்து மீள்விக்கப்பட்டது