உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 31.pdf/219

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

194

மறைமலையம் - 31

நிலையாக இருந்து உயிர்வாழ்தற்கு இன்றியமையா தனவான இல்லங்களை முதலில் மரங்களினாலும், பின்னர்ச் சிலகாலங் கழித்துக் கற்களினாலும் அமைக்கலாயினர். அங்ஙனந் தமக்கு ல்லங்கள் அமைத்துக் கொண்டது போலத் தாம் வணங்குஞ் சிவலிங்க் திருவுருவிற்கும் பின்னர் இல்லங்கள் வகுக்கலாயினர். றைவனைப் பழந் தமிழர் கோ என்னும் ஓரெழுத்தொரு மொழியால் அழைத்தமையின், அவ்விறைவனைச் சிவலிங்க வுருவில் எழுந்தருளச் செய்து தாம் அமைத்த ஓர் இல்லினையும் அம் மொழியோடு சேர்த்துக் கோயில் என வழங்கலாயினர். இதுவே, சிவலிங்கத் திருவுருவும் அதனை நிறுத்தி வணங்குதற்கு ருப்பிடமாய் அமைத்த திருக்கோயிலும் பண்டைத் தமிழர்களிடையே தோன்றிய வரலாறாகுமென் றுணர்ந்து

கொள்க.

இனி, இவ்விந்தியதேயத்தின் வடமேற்கு மாகாணத்தில் நாகரிகத்தில் மிக்கோங்கி விளங்கிய பண்டைத் தமிழ் மக்களிடையே, மேய்ப்பர்களான ஆரியர் இத்தேயத்திற்குப் புறம்பேயிருந்து போந்து குடியேறிய பின், தமிழ் மாந்தர் புரியுந் தீச்சுடர் வணக்கத்தைக் கண்டு, அதைப் போற் றாமுஞ் செய்யத் துவங்கித், தாம் வழக்கமாய் வெட்டித் தின்றுவரும் மாட் டிறைச்சியைத், தாம் வளர்த்த தீச்சுடர்க்கு முன் படைத்துப்,பின் அதனை விழுங்கி வரலாயினர். உயிர்க் கொலையைப் பெரிதும் வறுப்பவரான தமிழ் முதுமக்கள், ஆடு மாடு குதிரைகளை இரக்கமின்றி வெட்டி ஆரியர் வேட்கும் வேள்விகளைக் கண்டு மனம் பொறாராய் அவ்வேள்விகளை அழிக்கத் துவங்கினர். அதனால் ஆரியர் பெரிதுந் தமிழர்கண் மேற் கொடும் பகைமைகொண்டு, ஆற்றலிற் சிறந்த அவர்களை அழித்தல் தம்மால் ஆகா மையின், தாம் வணங்கிப் போந்த தம் படைத் தலைவரின் ஆவிகளான இந்திரன் வருணன் மித்திரன் முதலானவர் களையே நோக்கி தமதிடரைச் சொல்லித், தமிழரை அடியோடு அழித்து விடும்படி வேண்டினர். ஆரியர் தாம் வேட்ட வேள்விக்களத்தே சோமப்பூண்டின் சாற்றிற் சமைத்த கள்ளைப் பருகிக் களியாட்டயர்ந்தமையிற் றம்மைச் ‘சுரர்' என உயர்த்துப்பேசிக் கொண்டனர்; ஆரிய மொழியிற் ‘சுரர்’ என்னுஞ் சொல் கள்ளினையே உணர்த்தா நிற்கும். மற்று, அத்தகைய கள்ளினைப் பருகாத தமிழரை யோ அவர்கள்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_31.pdf/219&oldid=1592953" இலிருந்து மீள்விக்கப்பட்டது