உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 31.pdf/220

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* தமிழர் மதம்

195

அசுரர்' என்னும் பெயராற் சுட்டுவாரா யினர். சுரர், அசுரர் என்னுஞ் சொற்களின் உண்மைப் பொருள்களை நோக்குங்காற் கள்ளைக் குடிக்கும் ஆரியரை இழிந்தவராகவுங், கள்ளைக் குடியாத தமிழரை உயர்ந்தவரா கவுமே அறிவுடையோர் கருதா நிற்பர். ஆனால், ஆரியரோ தம்மைச் சுரர் என உயர்த்தியுந், தமிழரை அசுரர் எனத் தாழ்த்தியுந் தாம் பாடிய பாட்டுகளிற் பேசியிருக்கின்றனர்.

.

இனித் தமிழரிடமிருந்து கற்றுக்கொண்ட தீ வணக்கத்தை ஆரியர் தமக்கு இசைந்தபடி அருளொழுக்கத் திற்கு மாறான வழியிற்றிருப்பி, அதற்குடம்படாத தமிழரைப் பகைத்து வந்தமையின், நெடுங்காலம் வரையில் இரு வகுப்பார்க்கும் ரு பெரும்போராட்டம் நடைபெற்று வந்தது. ஆனாலுங், கல்வியறிவிலுஞ் செல்வ வளத்திலும் பிற நாகரிகத் துறை களிலும் விழுமியராய் வயங்கி ஆற்றலிலுந் தலைமையிலும் ஈடும் எடுப்புமின்றி வீறி நிற்பவரான தமிழரை எதிர்த்துத் திறப்பாக வெற்றி பெறுதற்கு, அவ் வகைகளிலெல்லாம் வறுமைப்பட்டுச் சீர்குலைந்து அழுங்கு வோரான ஆரியர் சிறிதும் இயலாதவராகவே போயினர். அது கண்டு சூழ்ச்சியில் மிக்கவரான ஆரியக் குருமார் சிலர் பலர், தமிழ் மன்னரையுந் தமிழ்ச் செல்வரையும் அண்டிப் பிழைக்க வழிதேடியதுடன், அவர் மறைபொருளாய் வைத்திருந்த மெய்ப் பொருளறிவையுங் கோட்பாடுகளையும் அவர்க்கு மாணாக்கராகி அவர்பாலிருந்துங் கற்றுக் கொண் டனர். உத்தாலக ஆருணி என்னும் பார்ப்பன குரு அசுவபதி கைகேயன் என்னுந் தமிழ் வேந்தன்பாலுங், கார்க்கிய பாலாகி என்னும் பார்ப்பன குரு அசாத சத்துரு என்னுந் தமிழ் வேந்தன்பாலும், நாரதன் என்னும் பார்ப்பனன் சனற் குமாரர் என்னுந் தமிழ்க் கடவுளான முருகப்பிரான் பாலுஞ் சென்று மெய்ப் பொருளறிவு பெற்ற வரலாறுகள் 'சாந்தோக்கியம்' 'கொஷீதகி' முதலான பழைய உபநிடதங் களிலே தெளிவாக எடுத்துச் சொல்லப்பட்டிருக்கின்றன.

இவ்வாறு ஆரியக் குருமார் தமிழ்ச் சான்றோரை யடுத்து அவரால் மெய்ப்பொருள் அறிவுறுக்கப்பட்ட பின், தாம் அதற்குமுற் செய்துபோந்த வெறியாட்டு வேள்வியின் புன்மை யுந் தீவினையும் நன்குணர்ந்து, அது செய்தலை முற்றுங் கைவிடலாயினர். வேள்வித் தீக்கு எதிரிலே மாட்டை வெட்டி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_31.pdf/220&oldid=1592954" இலிருந்து மீள்விக்கப்பட்டது