உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 31.pdf/221

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

196

மறைமலையம் - 31

அதன் தசையை அதற்குப் படைத் தெடுத்துத் தின்னல் பெருந் தீவினையாதலின் அதனைத் தமக்கு மெய்ப்பொருள்

வேள்விக்களத்தே

அறிவுறுத்திய தமிழாசிரியர் துணை கொண்டொழித்து, வேள்விக் குண்டத்திற்கும், அதன்கண் வளர்க்கப்பட்ட தீச்சுடருக்கும் அறிகுறியாக அமைத்து நிறுத்தப்பட்ட சிவலிங்கத்தின் எதிரிலே அதனைச் சென்றணுகுந் தூய உயிருக்கும் முன் வேள்விக் களத்தே வெட்டப்பட்ட மாட்டுக்கும் அடையாளமாக ஒரு மாட்டினுருவைக் கல்லிற் சமைத்து அதற்கு 'நந்தி' என்னும் பெயர் சூட்டி அதனைச் சிவலிங்கத்தின் எதிரே நிறுத்தலா யினர்; அஙஙனம் அம்மாட்டினுருவை நிறுத்துங்கால், முன்னே வேள்விக் களத்தில் மாட்டின் தலையை வைத்து வெட்டுதற்கு இடமாயிருந்த மேடையைப் 'பலிபீடம்’ எனப் பெயர் தந்து, அதனையும் அம்மாட்டிற்குப் பின்புறத்தே அமைத்து வைக்கலாயினர். முதலில் மரநீழல்களிற் றமிழ்ப் பழமக்களாற் சிவலிங்க வுருவம் மட்டுமே வைத்து வழிபாடு செயப்பட்டு வந்ததாகப், பின்னர் உண்டான ஆரியக் குருமாரின் சேர்க்கையாலோ நந்தியும் பலிபீடமும் அச் சிவலிங்கத் திருவுருவின் எதிரிலே மேலும் மிகுதியாகச் சேர்த்தமைக்கப் பட்டுச் சிவபிரான் றிருக்கோயில்கள் நாடெங்கும் வகுக்கப் படலாயின. இதுவே பழையநாளிற் சிவபிரான் றிருக் கோயில்கள் வரவரப் பிற்சேர்க்கை யுடை யனவாய் அமைக்கப்பட்டு வந்த உண்மை வரலாறாகும்.

இங்ஙனம் போந்த திருக்கோயிலமைப்பில் ஆரியர் செய்துபோந்த வெறியாட்டு வேள்வியின் அடையாளங்கள் காணப்படுதலைக் கண்டு மனம்புழுங்கிய இடைக்காலத் தமிழ்ச் சான்றோர், அக்கொடிய வேள்வியின் நினைவை அறவே மாற்றிவிடுதற் பொருட்டு, அவ்வடையாளங்களுக்கு அவர் கொண்ட பருப்பொருளை யொழித்து, அவை தமக்கு மேன்முறையிற் செல்லும் நுண்பொருளுரைக்கத் தலைப் பட்டார். சிவலிங்கத் திருவுருவமானது எல்லாம் வல்ல முழுமுதற் கடவுளைக் குறிப்பதாமென்றும் பலிபீடமானது அம்முழுமுதற் கடவுளின் றிருவருளைப்பெற விழைந்து செல்லும் ஓர் உயிர் தனக்கிருந்த அறியாமையையும் யான் எனது என்னுஞ் க்கையும் வெட்டி வீழ்த்தும் ஓருயர்ந்த இடத்திற்கு அறிகுறியாமென்றும்,

அப் பலிபீடத்தைக் கடந்து

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_31.pdf/221&oldid=1592955" இலிருந்து மீள்விக்கப்பட்டது