உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 31.pdf/222

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* தமிழர் மதம்

197

சிவலிங்கத்தின் எதிரே வைக்கப்பட்டிருக்கும் நந்தியானது அறியாமையுஞ் செருக்கும் அற்றுத் தூய்தாகிச் சிவத்தின் றிருவருட்பேற்றை நாடிச் சல்லுந் தூய

உயிருக்கு

டைக்

அடையாளமாமென்றும் உயர்ந்த நுண்பொருள் காலத்தாசிரியரால் அவை தமக்குக் கற்பிக்கப்பட்டமை நன்கு புலனாகா நிற்கின்றது. அது, தி.பி. ஐந்தாம் நூற்றாண்டிலி ருந்தவரான திருமூலர்.

66

‘ஆய பதிதான் அருட்சிவ லிங்கமாம்

ஆய பசுவும் அடலே றெனநிற்கும்

ஆய பலிபீடம் ஆகும்நற் பாசம்

ஆய அரன்நிலை ஆய்ந்துகொள் வார்க்கே’

ச்

என்று அருளிச்செய்த திருமந்திரத் திருப்பாட்டால் நன்கு புலனாகா நிற்கின்றது. சைவசித்தாந்தத்தின்கண் உணர்த் தப்படும் பதி பசு பாசம் என்னும் முப்பொருளிலக்கணங் களையே சிவாலய அமைப்பு உணர்த்துகின்றதென செய்யுள் நுவலா நிற்கின்றது. மூலத்தானம் என்னுங் கரு வறையினுள் நிறுத்தப்பட்டிருக்குஞ் சிவலிங்கம் முழுமுதற் கடவுளாகிய பதியையும், அச்சிவலிங்கத்தி னெதிரே வைக்கப் பட்டிருக்கும் மாட்டின் வடிவான நந்தி அப்பதியை நாடிச் செல்லுந் தூய உயிரான பசுவையும், அந்நந்தியின் பின்னே எ அமைக்கப்பட்டிருக்கும் பலிபீடம் அப்பசுவினாற் றொடர் பறுத்துக் கழிக்கப்பட்ட ஆணவ மலமாகிய பாசத்தையும் உணர்த்துமென இடைக் காலத்திருந்த சைவசித்தாந்த

ஆசிரியரான திருமூலர் தெளிவுபடுத்திக் கூறுதல் காண்க.

இனித், திருமூலநாயனார்க்கு ஆயிரமாண்டு பிற்பட்டு வந்த கடைக்காலத்திற் சிவாகமங்களை வடமொழியில் எழுதிய கோயிற் குருக்கள்மார், சிவபிரான் திருக்கோயில் களைச் சிவனடியார்களின் நெஞ்சத் தாமரையின் வடிவாக வும், அவர்களின் பருவுடம்பு நுண்ணுடம்பு மூலவுடம்பு களின் வடிவாகவும் அமைக்கும் முறைகளையும் அவற்றின் கண் வைகுந் தெய்வங்களை வழிபடும் முறைகளையும் வரவரப் பெருக்கி வரையலாயினர். அங்ஙனம் அவர்கள் பிற்காலத்திற் பெருக்கி வகுத்த முறைகளின்படி கட்டப்பட்ட சிவபிரான் றிருக்கோயில்கள் இத்தென்றமிழ் நாட்டின்கட் பற்பல

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_31.pdf/222&oldid=1592956" இலிருந்து மீள்விக்கப்பட்டது