உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 31.pdf/231

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

206

மறைமலையம் - 31

இறைவனைத் தொழுது போந்தனர் நந்தமிழ்த் தவ ஆசிரியர். அதனால் அவர் பெற்ற இம்மை மறுமைப் பயன்கள் பல. ங்ஙனம் ஓங்கார வடிவிலே கண்ணுங் கருத்தும் ஒருவழி உறைத்துநிற்க அவர் ஓவாது கூறிவந்த ஓங்காரஒலி பெறற்கரும் பயன்கள் பலவற்றைத் தமக்குந் தம்மைச் சார்ந்தார்க்குந் தருதல்கண்டு, அவர் அதனை ஒரு தலைசிறந்த மந்திரமாகக் கருதலாயினர். எல்லா ஒலிகட்கும், அவ்வொலிகளை உறுப்பாய்க் கொண்ட எல்லா மந்திரங் கட்கும் முந்தியதாய், அவற்றின் முதல்நின்று அவற்றை இயக்கிப் பயன்றருதல் பற்றியே வ்வோங்காரம் 'மந்திர அரசு' என்று முனிவர்களால் வழங்கப்பட்டு வருகின்றது.

இனி, ஓங்காரத்தை வடிவில் எழுதியும் வாயினாற் சொல்லியுங் கடவுள் வழிபாடு ஆற்றிவந்த நந்தமிழாசிரியர் தாம் அதனாற் பெரும்பயன் அடைந்தளவில் அமைதியுறாது, தாம் பெற்ற பயனைத் தம்மோடொத்த மக்களெல் லாரும் பெற்று இன்புறல் வேண்டுமெனக் கருதினவர்களாய், எழுத்தினுருவையும் அவ்வெழுத்தின் ஒலியையுங் கண்டுங் கேட்டுஞ் சொல்லியும் இறைவனை வணங்குமளவுக்குப் பொதுமக்கள் உள்ளம் ஒருப்படாரென உணர்ந்து, அவ் வோங்கார வுருவினை அவர் புலங்கொளக் காணும் ஒரு சிறந்த வடிவிலே வைத்துக் காட்டுதற்கு முனைந்து, அவர்க் கேற்றதொரு முடிவு யாதாகலாமென ஆராய்ந்து காணலா யினாராதல் வேண்டும். நாம் அறிந்த உயிர்ப்பொருள்களிலே ஓங்கார வடிவினை நங் கட்புலனெதிரே விளங்கக் காட்டுவது யாது? யானையும் பாம்புமே யல்லவோ? யானையின் முகமும் அதன்கீழ்த் தொங்கும் நீண்டுசுருளும் புழைக்கையும் ஓ என்னும் எழுத்தின் வடிவத்தை முழுதும் ஒத்திருத்தல் காண்க. அங்ஙனமே, நல்லபாம்பின் படமும் நீண்டு சுருளும் அதன் உடம்பும் ஓங்காரவடிவினை முழுதும் ஒத்திருத்தலும் நினைவு கூரற்பாற்று. யானையும் பாம்பும் ஓங்கார வடிவினை யொத்திருப்பினும், பாம்பினும் யானையின் வடிவமே அதற்கு மிகவும் இயைந்த தொன்றாகத் தமிழ்ச் சான்றோர்களால் எடுக்கப்பட்டது. ஏனெனிற், கூறுதும், எல்லா உயிர்ப் பொருள்களிலும் முழுமுதற் கடவுள் ஒருவரே பெரியராதல்போல, எல்லா உயிர்களிலும் யானையே உருவத்தாலும் வலிமையாலும் பெரிய தொன்றாய்க்

L

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_31.pdf/231&oldid=1592965" இலிருந்து மீள்விக்கப்பட்டது