உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 31.pdf/233

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

208

மறைமலையம் - 31

-

நன்கு விளக்கிக்காட்டி யிருக்கின்றேம். அங்கே அதனைக் கு

கண்டுகொள்க.

புறப்பொருளுணர்ச்சியோடு அகப்பொருளுணர்ச்சியும் மிக்க அருந்தவத்தோர் தொகை பெருகத் துவங்கிய பின்னரே, இறைவனை ஒலிவடிவில் வைத்து வணங்கும் வணக்கமும், அதன்வழியே யானைமுகமுடைய பிள்ளை யார் வழிபாடும் இவ்விந்திய நாடெங்கணுந் தோன்றி நிலைபெற லாயினவென்று அறிந்து கொள்ளல் வேண்டும். எல்லா வொலிகட்கும் முற்பட்டு ஓங்காரவொலியே இயற்கையாய்த் தோன்றி நிலவக் காண்டலின், எல்லா வணக்கங் கட்கும் முதலதாய்ப் பிள்ளையார் திருவுருவ வணக்கமே சிவபிரான் திருக்கோயில்கள் எல்லா வற்றிலும் நடை பெறுமாறு அவரது வடிவம் அவற்றின் முகத்தே அமர்த்தி வைக்கப்பட்டது.

இங்ஙனமே காலங்கடோறும் இறைவனை வணங்கு தற்குத் திருக்கோயிலினுள் வரும் பலதிறமக்களின் பல திற நம்பிக்கைகளுக்கும் பலதிறக் கொள்கைகளுக்கும் ஏற்பப் பற்பல தெய்வ வடிவங்கள் சிவபிரான் திருக்கோயில் களினுள்ளே நுழைக்கப்பட்டுச் சிவலிங்கப்பெருமான் எழுந்தருளியுள்ள கருவறையைச் சூழவுள்ள சுற்றுகளில் நிறுத்தப்படலாயின. என்றாலும், பண்டைக்காலந் தொட்டுத் தமிழ்மக்களால் வணங்கப்பட்டு வந்ததும் வருவதும் ஒளிப்பிழம்பாய் விளங்கும் ஒரு முழுமுதற் கடவுளே என்பதற்குக், கோயிலின் நெஞ்சம் போன்ற கரு வறையிலே சிவலிங்கம் (அருட்குறி) ஒன்றுமே முதன்மை யாய் நிறுத்தப்பட்டிருத்தலும், அதனைச் சூழ்ந்த பிற இடங்களின் மட்டுமே பிறதெய்வங்கள் அமர்த்தப்பட் டிருத்தலுமே சான்றாமென்க.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_31.pdf/233&oldid=1592967" இலிருந்து மீள்விக்கப்பட்டது