உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 31.pdf/234

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

209

24. திருவிழாக்கள்

மேற்கூறியவாறு சிவபிரான்

திருக்கோயில்களுந் திருக்கோயிற் றெய்வங்களும் அமைக்கப்பட்டு, அவை தம்மை வணங்க வருவார் தொகை மிகுதிப்பட்ட பின், ஓராண்டிற் பல சிறப்பு நாட்கள் குறிக்கப்பட்டுக், குறிக்கப் பட்ட அந்நாட்களிலே சிவபிரான் றிருவுருவத்தையுஞ், சிவபிரானைச் சார்ந்த பிறதெய்வங்களையுங் கோயிலுக்குப் புறத்தே ஊர்வலமாகக் கொணர்ந்து திருவிழாக்கள் கொண்டாடும் வழக்கம் ஆங்காங்குத் தோன்றலாயிற்று. நாடோறுந் தாஞ்செய்யுந் தொழிலையே செய்துகொண்டும், காண்டும், நாடோறுந் தாம் உடுப்பதனையே உடுத்துக்கொண்டும், நாடோறுந் தாங் காண்பன கேட்பன பேசுவன முதலானவைகளையே கண்டு கேட்டுப் பேசிக் கொண்டும் வாழ்நாட்கடத்தும் மாந்தர்க்கு இடையிடையே தாஞ் செய்யுந் தொழிலினின்று ஓய்வுபெற்றும், இனியன புதியன உண்டும், அழகிய புதியன உடுத்தும் புதிய ஊர்களையுந் தோப்புகள் இளமரக்காக்கள் ஆறுகள் குளங்கள் ஏரிகள் முதலியவைகளையும் புதிய மாந்தர் களையுங் கண்டும், அவர் தனித்தனிக் குழுவினராய்த் தத்தம் ஊர்களிலிருந்து கொணர்ந்து பேசும் பல புதிய செய்தி களைக் கேட்டுந், தம் மனைவி மக்கள் பெற்றார் உற்றார் உறவினர் நண்பர் முதலாயினருடன் கூடிப் புதிய பல பேச்சுக்களைப் பேசியும், இவற்றுடன் வெறும் உலகிய லின்பத்தளவில் உள்ளம் மகிழ்ந்துவிடாமல், தம்மைப் படைத்துத் தமக்கு இத்தனை நலங்களையும் வழங்கியருளிய இறைவன் றிருவுருவத்தினைக் கண்ணும் மனமுங் கரையக் கண்டு வணங்கியும் வந்தாலல் லாமல், நம்போன்ற மாந்தர்க்கு வரவரப் புதியவுணர்ச்சியும், மனக்கிளர்ச்சியும், உயர்ந்தவற்றி லெல்லாம் உயர்ந்த கடவுளுணர்ச்சியும் உண்டாக மாட்டா; அவை யுண்டாகா விடின், அவர் மேன்மேற் பெருகும் அறிவும் இன்பமும் பெறாராய்ப் பகுத்தறிவு அற்ற விலங் கினங்களை

L

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_31.pdf/234&oldid=1592968" இலிருந்து மீள்விக்கப்பட்டது