உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 31.pdf/235

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

210

மறைமலையம் – 31

யொப்ப உண்டு உறங்கிச் சிலநாளில் உயிர் துறந்து போவர்! இவ்வாறு நம்மாந்தர் கிடைத்தற்கரிய இம்மக்கட் பிறவியை இறைவன் றிருவருட்டிறத்தாற் பெற்றும், அதனாற் பெறுதற் குரிய பெரும் பயனைப் பெறாமல் அதனை இழந்து போகின்றா ராதலின், அங்ஙனம் அவர் அதனை இழவாமைப் பொருட்டே, நம் நாட்டகத் திருந்த சான்றோர்கள் சிவ பிரானுக்குத் திருக்கோயில்கள் எடுப்பித்த வளவில் நின்று விடாமல், அறிவிற் று சிறியரான பொதுமக்கள் மேன்மேல் அறிவும் இன்பமும் பெற்றுத் தமது பிறவியைக் கடவுளை அகங்குழைந்து வழுத்து முகத்தால் விழுமிதாக்கிக் கொள்ளும் பொருட்டே குறிப்பிட்ட சிறப்புநாட்களில் ஆங்காங்குத் திருவிழாக்கள் நடைபெறுதற்கும் ஏற்பாடுகள் செய்துவைப்பராயினர்.

இத்திருவிழாக் காலங்களில், விழா நடைபெறும் ஊரைச் சூழ்ந்துள்ள பற்பல சிற்றூர்களிலிருந்துந், தொலை விலுள்ள பற்பல நாடு நகரங்களிலிருந்தும் ஆடவரும் மகளிருந் தத்தங் குழந்தை குட்டிகளுடன் உற்றார் பெற்றார் உறவினர் நண்பருடன், கடவுளைத் தொழப் போகும் பேரெண்ணந் தமதகத்தே முன்னெழுந்து நிற்க, நீராடிக் கூந்தல் நீவித் தூயஆடை யுடுத்து நறுமணங் கமழும் மருவு மருக்கொழுந்து பன்மலர்மாலை சூடித் தத்தந் தருதிக்குத் தகப் பல்வகை அணிகலம் பூண்டு உள்ளும் புறம்புந் தூயராய்த் தொகுதி தொகுதியாக மனக்களிப்புடன் வருதலை இன்றுங் காண்மின்கள்! திருவிழா நடக்குந் திருக்கோயிலின் உள்ளும் புறம்பும் ஓவியந் தீட்டிய ஆடைகளுந் தெய்வ உருக்களுங் கட்டித் தோரணங்கள் நாற்றி ஒப்பனை செய்யப்பட்டிருக்கும் உயர்ந்தகன்ற பந்தர்களின் நீழற்கீழ் அம்மாந்தர்கள் கூட்டங் கூட்டமாக அமர்ந்திருக்குங் காட்சியைப் பார்மின்கள்! கோயிலின் உட்சுற்று புறச்சுற்றுகளிலும் எதிரிலும் ஊரிலே ஆங்காங்குள்ள தெருக்களிலும் பல்வகை அறிவு நூல்கள் விற்குங் கடைகளும், அறச்சோறு வழங்கும் இல்லங்களும், பருகற்கினிய தேனீர் நீர்மோர் வார்க்குந் தண்ணீர்ப் பந்தர்களும், அப்பங்கள் முறுக்கு வடை தீம்பாகுகள் முதலியன விலைசெய்யுஞ் சிற்றுண்டி விடுதிகளும், ஓவியங்கள் புதுமையான காட்சிகள் அமைந்த நிலையங் களும் பல்வேறு மலர்கள் புழுகு நானம் முதலான ஏனை மணப்பண்டங்கள்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_31.pdf/235&oldid=1592969" இலிருந்து மீள்விக்கப்பட்டது