உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 31.pdf/236

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழர் மதம்

211

விற்குங் கடைகளுஞ், செப்புக்கலங்கள் பித்தளைக்கலங்கள் பொன் வெள்ளி நகைகள் விலை செய்யும் ஆவணங்களும், பட்டாடை நூலாடைகள் விற்பனைக்கு விரித்து வைத்திருக்கும் ஒள்ளிய கடைகளும் பிறவும் விளங்குதலும், அவற்றின் கண்ணே மக்கள் திரள்திரளாய் நின்று தத்தமக்கு வேண்டியவைகளை வாங்குதலும், வாங்கிக் கொண்டு வரிசை வரிசையாய் மகிழ்ந்து செல்லுதலுமாகிய காட்சி காணக் காண எவ்வளவு அழகிதாய், எவ்வளவு மனக்கிளர்ச்சி யினைத் தருவதாய்ப் பொலிகின்றது! இன்னும், ஒரு பக்கத்தே தேவார திருவாசகங் கரும்பினுங் கனியினும் இனிக்க இன்னிசை யுடன் மிழற்றுவார் குழுவும்

L

மற்றொரு பக்கத்தே இறை வனையும் இறைவன்றன்

அருள்பெற்ற அடியாரையும் பற்றிச் சொற்பொழிவுகள் செய்யுஞ் செந்தமிழ் நாவலரைச் சூழ்ந்த அறிஞர் குழாமும், பின்னும் ஒரு பக்கத்தே சிறாரும் இளைஞரும் மரக்குதிரைகள் ஏறிச் சுற்றுங் கூடாரங்களும், மேலும் ஒருபக்கத்தே மேலுங் கீழுமாய்ச் சுழற்றப்படும் மரத்தொட்டில்களிலே இளைஞர்கள் அமர்ந்து விளை யாடும் இராட்டினங்களும் பின்னும் ஒரு பக்கத்தே அடியார் வரலாறுகளை ஆடிக் காட்டும் நாடக அரங்குகளும், இன்னும் நஞ்சொல்லளவில் அடங்கா எத்தனையோ பல புதுமைகளுங் காட்சிகளுந் திருவிழா நடக்குஞ் சிவபிரான் றிருக்கோயில் வாய்ந்த ஊர்களிலும் நகரங்களிலும் ஒரு காலத் தோரிடத்தே கண்ணாரக் கண்டு இன்புறுதற்கு வாய்த்தலை உணர்ந்து பார்மின்கள்!

இங்ஙனமாகலின், ம் ம்மை யின்பமும், அதனைத் தொடர்ந்து உயிரோடு உட உயிரோடு உடன் இயைந்து சென்று நிலைபெறு வதான மறுமையின்பமும் ஒருங்கே சேர்ந்து நின்று, மக்களின் உடம்பையும் உயிரையும் ஒருகாலத்தே ஓரிடத்தே ஊடுருவிக் கனிந்து பெருகித் தித்திக்கச் செய்யும் எளிய இனிய கருவிகளாகவே சிவபிரான் றிருக்கோயிற் றிரு விழாக்கள் தமிழ்ச்சான்றோர்களால் தொன்றுதொட்டு வகுக்கப் பட்டிருக்கும் நுட்பம் அனைவரும் நினைவிற்பதிக் கற் பாலார். இம்மையின்பத்தை வெறுத்துப் பேசி இறைவ னின்பத்தையும் இல்லாத தொன்றாக வைத்து இல் வழக்குப் பேசும் புத்தர் சமணர்கள், தமது கொள்கையின் உறைப்புக்கு இணங்க, உடனே ஊண் துறந்து தமதுடலை மாய்த்து விட்டனரா? ல

ஒரு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_31.pdf/236&oldid=1592970" இலிருந்து மீள்விக்கப்பட்டது