உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 31.pdf/237

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

212

மறைமலையம் - 31

சிறிதுமில்லையே. அவரும் அவர்தங் கொள்கைகளைத் தழுவினாரும் ஊண் உடைகொண்டு ஐம்புல இன்பங்களும் மற்றை மக்களைப் போலவே ஆரத் துய்த்து வருகின்றன ரல்லரோ? இனி, இம்மை யின்பத்தை இல்லாத வெறும் பொய்யெனக் கரைந்து, தன்னைக் கடவுளாக நினைந்திருக்கும் மறுமையின்ப மொன்றே மெய்யென வாய்ப்பறை யறையும் மாயாவாத வேதாந்தி களாவது தமதுடலைப் பொய்யென மாய்த்து, உடனே தம்மைக் கடவுளாக நினைந்து மறுமை யின்பத்திற் போய் அமர்ந்துவிட்டனரா? அதுவுமில்லையே. ஏனை மாந்தரைப் போலவே, அவரும் அவரைச் சார்ந்தாரும் உண்டு உடுத்து உறங்கி ஏனை ஐம்புல நுகர்ச்சிகளையும் நுகர்ந்து, காலங் கழிந்தபின் காலனுக்கு இரையாகின்றன ரல்லரோ? இனி இம்மையின்பத்தைத் தவிர, மறுமையின்பம் வேறில்லை யென அறை கூவும் உலகாயதரேனுந், தாங்கூறும் இம்மை யின்பத்தை நோயுங் கவலையும் அச்சமுமின்றித் துய்க்க மாட்டுவரா? அல்லது, முதலிற் றமது கொள்கையினைத் தழுவினோர்? பின்னர் அதன் பொய்ம்மையுணர்ந்து இறைவனை வழுத்தி மறுமையின்பம் பெறப் போதலைத் தடுக்க மாட்டுவரா? அல்லது எல்லாக் கலைகளிலும் வல்லராய் இறைவனிடத்துப் பேரன்பு பூண்டு விளங்கும் அறிஞரைத் தமது உலகாயதக் கொள்கைக்குத் திருப்ப மாட்டுவரா? அல்லது கடவுளிடத்து மெய்ந் நம்பிக்கையுந் கடவுள்வழிபாட்டில் மெய்யன்புமுடைய பொது மக்களை யேனுந் தமது உலகாயதக் காள்கைக்குத் திருப்ப வல்லுநரா? அல்லது, மிக வியத்தகு தெய்வ அருள் நிகழ்ச்சி களைப் பட்டப்பகலில் நங் கண்முன்னே இப்போதும் வருவித்துக் காட்டாநிற்கும் மருதூர்த் தெய்வ யானையம்மையாரின் அரிய அருட்செயல்களைத் தெய்வச் செயல்கள் அல்ல வென்று எந்த உலகாயதரேனும் நிறுவிக் காட்ட முன் வருவரா? இன்னும், மேல் நாட்டிலுள்ள உயிர்நிலை ஆராய்ச்சிக்கழகத்தார்' வெளியிட்டு வருந் தெய்வக்காட்சி யுடையரின் உண்மை வரலாறுகளை யெல்லாம் பொய்யென்று நாட்ட எந்த உலகாயதரேனுந் துணிந்து முன் வருவரா? மறுமை யின்பத்தைத் துய்ப்ப வரும் அதனை ஆராய்ந்து காணும் பேரறிஞரும் நாளுக்கு நாள் மிகுந்துவரும் ச் சிறந்த காலத்தே அதனை இல்லையெனக் கரைவாருரை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_31.pdf/237&oldid=1592971" இலிருந்து மீள்விக்கப்பட்டது