உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 31.pdf/238

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* தமிழர் மதம்

213

எத்தகைய பயனையும் பயவாதாகலின், இம்மையிற் றுய்க்கும் ன்பமெல்லாம் மறுமையின்பத்தின் முதற்சுவையா மென்றும், இம்மையின்பத்தின் றன்மையை உண்மையான் ஆராய்ந்து அதனைத் துய்க்குமுறை பிழைபடாமற் றுய்த்துவருவார்க்கு, அதுவே மறுமையின்ப மாய் மாறி அவரைப் பேரின்ப நுகர்ச்சியிற் செலுத்தி, அதனோடு தொடர்பு குன்றாதாய் நிற்குமென்றும் உணர்ந்து கொள்க. இதுவே, தமிழாசிரியரின் விழுமிய கொள்கையாதல்,

“பெற்றசிற் றின்பமே பேரின்பமாய் அங்கே முற்ற வரும்பரி சுந்தீபற

முளையாது மாயையென் றுந்தீபற”

என்னும் பழைய திருவுந்தியார் நூற்செய்யுளால் நன்கறியப் படும். இத்திருவுந்தியாரினும் பழமையுடையதாய் இற்றைக்கு ஆயிரத்து முந்நூறாண்டுகட்கு முன் இயற்றப்பட்ட திருமந்திரம் என்னும் மெய்யுணர்வு நூலும்,

“ஐந்தும் அடக்கடக் கென்பர் அறிவிலார் ஐந்தும் அடக்கும் அமரரும் அங்கில்லை ஐந்தும் அடக்கில் அசேதன மாமென்றிட்டு ஐந்தும் அடக்கா அறிவறிந் தேனே”

என நுவலுதல் கொண்டு, ஐம்புலங்களும் ஆரத்துய்க்கும் இம்மை யின்பநுகர்ச்சி விலக்கற்பால தன்றென்பதே தமிழ்ச் சான்றோர் கொள்கையாதல் தெளியப்படும். ஆனால், இவ் விம்மையின்ப நுகர்ச்சி, இறைவனை அகங்குழைந்து தொழுதலாகிய மறுமையின்பத்துடன் தொடர்பு கொண்டு நிகழாதாயின், அது பலவகையிற் பழுதுபட்டுத் துன்ப நுகர்ச்சிக்கட் செலுத்தும் என்பதும், அஃது அங்ஙனம் பழுதுபடாமற் றுய்த்தற்குரிய மெய்வழி இறைவனை எந் நேரமும் நினைந்துருகுதலேயாம் என்பதும் அறிவுறுத்து தற்கே "ஐந்தும் அடக்கா அறிவறிந் தேனே” என்று ஆசிரியர் திருமூலர் மேலைச் செய்யுளில் திருவாய் மலர்ந்தருளினார். ன்னுந், திருமூலர்க்கு முன்னிருந்த தெய்வத்திருவள்ளுவரும் இல்லறங் துறவறம் இரண்டனையுந் தொடர்புபடுத்திக் கூறுதலுந், திருவள்ளுவர்க்கு முன்னிருந்த தமிழாசிரியர்களும்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_31.pdf/238&oldid=1592972" இலிருந்து மீள்விக்கப்பட்டது