உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 31.pdf/239

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

214

மறைமலையம் - 31

ஒல்காப் புலமைத் தொல்காப்பியரும் இம்மை மறுமை யின்பங்கள் இரண்டனையும் அகத்திணை புறத்தினை யெனப் பெயர்தந்து, ஒன்றனோடு ஒன்று தொடர்பு கொண்டு நிற்றலை விரித்து விளக்குதலுங் காண்க. இன்னும் இதன் விரிவைப் பழந்தமிழ்க் கொள்கையே சைவ சமயம் என்னும் எமது நூலிற் கண்டு கொள்க. எனவே, இம்மையின்பநுகர்ச்சி அத்தனையும் மறுமைப் பெயராப் பேரின்ப நுகர்ச்சிகட் செலுத்துஞ் சிவவழிபாட்டுடன் ஒருங்கு பிணைந்து

நடைபெறல் வேண்டுமென்னுங் கருத்துப்பற்றியே சிவபிரான் றிருக்கோயிற் றிருவிழாக்கள் ஆங்காங்கு நடை பெறுமாறு செந்தமிழ்ச் சான்றோரால் வகுக்கப்பட்டன. இங்ஙனம் வகுக்கப்பட்ட திருவிழாக்களுட் சிவ வழி பாட்டை நோக்கி எடுக்கப்பட்ட மிகப் பழைய திரு விழாக்கள் கார்த்திகை விளக்குத் திருவிழாவுந் திருவாதிரைத் திருவிழாவும் ஆகும்; இவை இற்றைக்கு இரண்டாயிர ஆண்டுகட்கு முன்னே தொட்டு இத் தமிழகத்தே நடை பெற்று வருந் தனிச்சிறப்பு வாய்ந்தன த் வாகலின் இவற்றின் உண்மையை இங்கே சிறிது விளக்கிக் காட்டுவாம்.

1.

அடிக்குறிப்பு

The Society for Psychic Research

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_31.pdf/239&oldid=1592973" இலிருந்து மீள்விக்கப்பட்டது