உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 31.pdf/240

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

215

25. கார்த்திகை விளக்குவிழா

கார்த்திகைத் திங்களில் முழுமுதியானது அறுமீனைச் சேர்ந்த நாளின் இராக் காலத்து நடுவிலே, ஊரிற் றெரு வெங்கும் விளக்குகளை வரிசை வரிசையாக ஏற்றிவைத்து, மலர்மாலைகளைத் தொங்கவிடுதல் முதலாகிய ஒப்பனை களைச் செய்து, ஒளிவடிவினனாகிய எல்லாம்வல்ல இறை வனை வழிபடுந் திருவிழாப், பண்டைக்காலந் தொட்டு இன்றை ரையில் தென்றமிழ் நாட்டிலுள்ள தமிழ் மக்களாற்

66

காண் ாடப்பட்டு

வருகின்றது. இஃது இற்றைக்கு ரண்டாயிர ஆண்டுகளுக்கு முற்பட்ட காலத் திருந்தே தமிழ் மக்களால் மிக்க சிறப்புடன் கொண்டாடப் பட்டுவரும் பழமையுடைத்தென்பது, ஆசிரியர் நக்கீரனார் பாடிய 'அம்மவாழி தோழி” என்னும் அகநானூற்றுச் செய்யுளில் (141). “மழைகால் நீங்கிய மாக விசும்பிற் குறுமுயல் மறுநிறங் கிளர மதிநிறைந்து அறுமீன் சேரும் அகலிருள் நடுநாள் மறுகு விளக்குறுத்து மாலை தூக்கிப் பழவிறல் மூதூர்ப் பலருடன் துவன்றிய விழவுடன் அயர வருகதில் லம்ம”

என இக்கார்த்திகை விளக்குவிழாக் கொண்டாடப்பட்ட செய்தி நன்கெடுத்துக் கூறப்படுதலாற் றெற்றென விளங்கா நிற்கும்.

ங்ஙனம் பண்டைத் தமிழ்மக்கள் கொண்டாடிவரும் விளக்கு விழாவிலிருந்து, அவர்கள் இறைவனை ஒளிவடி வினனாகக் கொண்ட கொள்கையின் மாட்சி புலனாகா நிற்கின்றது. நங் கட்புலனெதிரே விளங்கித் தோன்றும் ஞாயிறு திங்கள் தீ விண்மீன் முதலான ஒளிவடிவுக ளெல்லாம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_31.pdf/240&oldid=1592974" இலிருந்து மீள்விக்கப்பட்டது