உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 31.pdf/241

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

216

மறைமலையம் – 31

இறைவன் வடிவேயென்பது, சைவசித்தாந்த இரண்டாம் ஆசிரியரான அருணந்திசிவனார்,

“நாயகன் கண்ந யப்பால் நாயகி புதைப்ப எங்கும் பாயிரு ளாகி மூடப் பரிந்துல கினுக்கு நெற்றித்

தூயநேத் திரத்தி னாலே சுடரொளி கொடுத்த பண்பிற் றேயமார் ஒளிக ளெல்லாஞ் சிவனுருத் தேச தென்னார்"

என்றருளிச் செய்த சிவஞானசித்திச் செய்யுளால் நன்கு விளங்கற்பாலதே யாம். ஒளிவடிவே கடவுள் வடிவாதலுங், கடவுள் உயிர்களின் காட்சிக்குங் கருத்துக்கும் அப்பாற் பட்டவராய் இராமல், அவர்தங் காட்சிக்குங் கருத்துக்கும் எளியராய் அவர்க்கு அணுக்கராயே நின்று அருள்புரிந்து வருதலும், இவற்றோ டினமானை ஏனை நுட்பங்களும் யாம் இயற்றிய மாணிக்கவாசகர் வரலாறுங் காலமும், சைவ சித்தாந்த ஞானபோதம், முதலான நூல்களில் விரிவா யெடுத்துக் காட்டப்பட்டிருக்கின்றன. அவையெல்லாம் இங்கே விரித்துரைத்தற்கு இடமில்லை.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_31.pdf/241&oldid=1592975" இலிருந்து மீள்விக்கப்பட்டது