உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 31.pdf/242

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

217

26. தீபாவலி

னித், தென்றமிழ் நாட்டுமக்கள் கார்த்திகைத் திங்கள் முழுமதி யிரவிலே விளக்குகளை வரிசை வரிசையாக வைத்து அவற்றின் ஒளிவடிவிலே எல்லாம்வல்ல முழுமுதற் கடவுளைக் கண்ணாரக் கண்டு வணங்கி வருதல் போலவே, வடநாட்டில் அக்காலத்திருந்த தமிழ் மேன்மக்களும் ஐப்பசித் திங்களில் விளக்குவரிசை வைத்து அவற்றின் ஒளியிலே விளங்காநின்ற முழுமுதற் கடவுளுக்குத் திருவிழாக் கொண்டாடி வந்தனர். அதுதான் தீபாவலி என வழங்கி வருகின்றது. வடநாட்டவர் தென்னாட்டிற் குடியேறியபின் தீபாவலித் திருநாள் இங்குள்ள தமிழரது கொள்கைக்கும் ஏற்றதாயிருத்தலின், அஃதிங்குள்ள தமிழ் மக்களாலுங் கொண்டாடப்பட்டு வருவதாயிற்று. கண்ணன் நரகாசுரனைக் கொன்றநாளின் நினைவுக்குறியாகத் தீபாவலித் திருநாள் கொண்டாடப்படுவதாயிற்று என்னுங் கதை பிற்காலத்திற் பார்ப்பனர் கட்டிவிட்ட தொன்றாகும். பார்ப்பனர் தமது உயிர்க்கொலை வேள்விக்கு உடம்படாத நரகாசுரன் என்னுந் தமிழ்மன்னன் ஒருவனைத், தமது உயிர்க்கொலை வேள்விக்கு உடம்பட்டுத் தமக்குத், துணை யாயிருந்த மற்றொரு தமிழ் மன்னனாகிய கண்ணனை ஏவிக் கொலை செய்தனர். இந்நிகழ்ச்சியை, இதற்கு முன்னமே தோன்றி நடைபெற்றுவந்த தீபாவலித் திருநாளில் இயைத்து, அத்திருநாளின் உயர்ந்த கருத்தை மாற்றி விட்டதெல்லாம் பார்ப்பனர் செய்த சூழ்ச்சிச் செயலாகும். தீபாவலி என்னுஞ் சொற்றொடர்ப் பொருளை ஆயுங்கால் அத்திருநாளுக்குங், கண்ணன் நரகாசுரனைக் கொன்ற நிகழ்ச்சிக்கும் ஏதோர் இயைபும் இல்லாமை தெளியப்படும். தீபாவலி என்பது தீப ஆவலி எனப் பிரிந்து விளக்குவரிசை என்றே பொருள்தரும். விளக்குவரிசை வைத்து அதன் கண்ணே இறைவனை வழிபடுங் கார்த்திகை விளக்கு விழாவுக்குந் தீபாவலி விழாவுக்கும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_31.pdf/242&oldid=1592976" இலிருந்து மீள்விக்கப்பட்டது