உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 31.pdf/243

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

218

மறைமலையம் - 31

வேற்றுமை சிறிதுமே யில்லை. ஆதலால், தீபாவலித் திருநாளுக்குப் பார்ப்பனர் பிற்காலத்தே ஏற்றி வைத்த பொருந்தாக் கதையை மறந்து, அஃது இறைவனை ஒளிவடிவில் வழிபடுந் திருநாளாதலைத் தமிழ் மக்களனைவரும் நினைவு கூர்வார்களாக!

66

திருமைலாப்பூரில் அறுபத்துமூன்று நாயன்மாரை நினைவுகூர்ந்து வணங்குதற்பொருட்டு நடத்தும் நடத்தும் அறு பத்துமூவர் திருவிழாவின் உண்மையறியாக் கீழ்மக்கள் ஒளவையார் அறுபத்துமூன்று பிள்ளைகள் பெற்றும் போதாமற் பின்னும் ஒரு பிள்ளைப்பேற்றிற்கு வரங்கேட்கும் நிகழ்ச்சியாகக்' கூறுங் கதைக்குந், தீபாவலித் திருநாள் நரகாசுரன் இறந்ததை நினைவுகூரும் நிகழ்ச்சியாகக் கூறுங் கதைக்கும் வேறுபாடு சிறிதும் இல்லை. ஆதலால், தீபாவலி, நரகாசுரன் கதைக்குச் சிறிதும் இசைவதன்றாய்க், கார்த்திகைத் திருநாளே போல், எல்லாம் வல்ல சிவ பிரானை ஒளிவடிவில் வைத்து வழிபடுந் திருநாளே யாகுமென்று மேன்மக்களனை வருங் கடைப்பிடித்துணர்ந்து, அவ் விரண்டிலும் வனையே வணங்கி உய்வார்களாக!

றை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_31.pdf/243&oldid=1592977" இலிருந்து மீள்விக்கப்பட்டது