உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 31.pdf/244

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

219

27. திருவாதிரைத் திருநாள்

66

இனி, ஆதிரை நாள் சிவபிரானுக்குரிய சிறந்த நாளாகப் பண்டைத் தமிழ்மக்களாற் கருதப்பட்டமை பழைய பரிபாடலின் எட்டாஞ் செய்யுளிற் போந்த ஆதிரை முதல்வன்” என்னுஞ் சொற்றொடராலும், அதன் உரை யாலும் நன்கறியப்படும். இனி, மார்கழித் திங்களில் வருந் திருவாதிரை நாளில் எல்லாம்வல்ல இறைவனாகிய சிவ பெருமானுக்கு இரண்டாயிர ஆண்டுகளுக்கு முன்னிருந்தே திருவிழாக் கொண்டாடப்பட்டமை, ஆசிரியர் நல்லந்துவனார் பாடிய பதினோராம் பரிபாடற் செய்யுளிற்போந்த,

66

‘கனைக்கும் அதிர்குரல் கார்வானம் நீங்கப்

பனிப்படு பைதல் விதலைப் பருவத்து ஞாயிறு காயா நளிமாரிப் பிற்குளத்து மாயிருந் திங்கள் மறுநிறை ஆதிரை விரிநூல் அந்தணர் விழவு தொடங்கப் புரிநூல் அந்தணர் பொலங்கலம் ஏற்ப

என்னும் பகுதியால் இனிது புலனாகின்றது.

இனி இவ்விருபெருந் திருவிழாக்களே யன்றி, மதுரையில் ஆவணி அவிட்டம் என்னும் ஒரு திருவிழாவும், உறையூரிற் பங்குனியுத்திரம் என்னும் ஒருதிருவிழவுங், கருவூரில் உள்ளி என்னும் ஒரு திருவிழாவும் ஆசிரியர் நக்கீரனார் காலத்திற்கு முன்னமே அஃதாவது இற்றைக்கு இரண்டாயிர ஆண்டுகட்கு முன்னமே இத்தென்றமிழ் நாட்டகத்தே நடைபெற்று வந்தமை, அவர் இறையனாரகப்பொருள் என்னும் நூலுக் குரைத்த தேனினும் பாகினும் இனிய தெள்ளிய விரிவுரையில்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_31.pdf/244&oldid=1592978" இலிருந்து மீள்விக்கப்பட்டது