உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 31.pdf/245

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

220

66

இனி,

மறைமலையம் - 31

னி, ஊர்துஞ் ஊர்துஞ்சாமை யென்பது ஊர்

பெருவிழா நாளாய்க் கண்பாடு

காண்ட

ல்லையாமாகவும் டையீடாமென்பது. அவை மதுரை ஆவணி அவிட்டமே, உறையூர்ப் பங்குனி யுத்திரமே, கருவூர் உள்ளிவிழாவே யென இவையும், இவைபோல்வன பிறவும் எல்லாம் அப்பெற்றியான பொழுது இடையீடாமென்பது”

எனக் கூறிய உரைப்பகுதியால் (16 ஆஞ் சூத்திரவுரை) நன்கறியக் கிடக்கின்றது. எனவே, மெய்யறிவுக்கு ஒரு வரம்பாய் நின்ற நம் பண்டைத் தண்டமிழ்ச் சான்றோர், எல்லா மக்களும் இம்மையின்பமும் மறுமையின்பமும் ஒருங்கே எளிதிற் பெற்றுத், தமக்கு இறைவன்றந்த அரிய மக்கட் பிறவியைத் தூய்தாக்கிக் கொள்ளுதற்கு ஒரு சிறந்த வாயிலாகவே சிவபிரான் றிருக்கோயிற் திருவிழாக்கள் மிகப் பழைய காலந்தொட்டே இத் தமிழகத்தில் ஆங்காங்கு நடைபெற்று வருமாறு வகுத்த மாட்சி நுண்ணறி வுடையாரெவர்க்குந் தெற்றென விளங்கா நிற்கும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_31.pdf/245&oldid=1592979" இலிருந்து மீள்விக்கப்பட்டது