உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 31.pdf/251

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

226

மறைமலையம் - 31

தமிழர் வழங்கிய அருள் அறச்செயலை முதற்கண் மேலைச் செய்யுள் எடுத்துக் கூறுதல் நெஞ்சிற் பதிக்கற்பாற்று.

அதன்மேல், உயர்ந்தகன்ற பந்தல் அமைத்து அதன் கண் வெள்ளிய ஆற்றுமணல் பரப்பி, மனையகமெங்கும் விளக்குகள் ஏற்றிவைத்துப், பூமாலைகள் தொடர்ந்து கட்டி ஒப்பனை செய்தபின், ஆண்டில் முதிர்ந்த மாதர் சிலர் தலைமேல் நிறைநீர்க்குடஞ் சுமந்தவராயும், வேறு சிலர் மண்ை யெனப்படும் அகன்ற அகலை விளக்கேற்றிக் கையில் ஏந்தினவராயும், வெள்ளிய மதியம் சகடு (உரோகிணி) என்னும் நாள்மீனைக் கூடிய நாளின் விடியற் காலையில் அப்பந்தலின் கண்ணே வந்து நிற்க, அவருள் வேறு சிலர் மணக்கூட்டு மலர் சாந்து சுண்ணம் புகை முளைப்பாலிகை முதலானவைகளில் முன்கொடுக்க வேண்டினவும் பின்கொடுக்கவேண்டினவுங் கொடுத்துக் கொண்டிருக்க, ஆண்மகப்பெற்ற மாதரார் நால்வர் வந்து மணமகளை வாழ்த்தி நெல்லு மலரும் அவளது கூந்தன்மேல் நீரொடு தூவியவுடனே, மணமகளைப் பெற்றார் போந்து அவளை மணமகன் கையிற் பிடித்துக்கொடுத்துப் 'பெரிய இல்லக்கிழத்தி ஆகக் கடவாய்' என வாழ்த்தித் திருமணத்தை நிறைவேற்றி வைப்பர். பண்டைத் தமிழர்க்குள் நடந்த இம்மணவினை பார்ப்பனர் உதவியில்லாமலே சில வகுப்பினர்க்குள் இஞ்ஞான்றும் நடைபெற்று வருகின்றது. இத்தகைய மணவினை பழைய ஆரியர்க்குள் நடந்ததே யில்லை.

அ ள

மேற்காட்டிய முறையில் தலைமகளை அவடன் தமர் கொடுப்பத் தலைமகன் மணந்துகொள்ளுந் திருமணச் சடங்கினையே ஆசிரியர் தொல்காப்பினார் 'கரணம்' என்னுஞ் சொல்லாற் குறித்தருளினார். இச்சொல் ‘கரு’ என்னும் முதனிலையினின்றும் பிறந்ததாகும். இம் முதனிலைப் பொருள் ம் முதனிலைப்பொருள் நினைவுகூர்தல் என்பது இப் பொருளிற் கருது கருத்து என்னுஞ் சாற்கள் வருதலுங் காண்க. இனி, உள்ளத்திற் கருதியதனை வெளியே செய்து முடித்தற்கு உதவிசெய்வதுங் கருவி எனப் பயர் பெறலாயிற்று; கரணம் என்னுஞ்சொல்லுங் காதலிருவரைப் பலர் அறிய இல்வாழ்க்கைப் படுப்பித்தற்குக் கருவியாய் நிற்குந் திருமணச் சடங்கிற்குப் பெயராய் நிற்றலை உற்று நோக்குங்கால், அதுவுங் கரு என்னும் முதனிலையிற்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_31.pdf/251&oldid=1592985" இலிருந்து மீள்விக்கப்பட்டது