உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 31.pdf/250

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழர் மதம்

225

நல்ல திருமணச் சடங்கு முடிந்த பிறகு, கல்லென்று ஆரவார ஒலியினைச் செய்யும் உறவினர் சிலர் விரைந்துவந்து, 'பெரிய இல்லக் கிழத்தி யாய்ப் பொலிவாயாக!' என வாழ்த்தி, என் கையில் அவளைப் பிடித்துக்கொடுப்ப, ஓர் அறையில் அவளும் யானும் ஒருங்கு புணர்ந்திருந்த இராப்பொழுதில், மேலைச்செய்யுள் பொருள்பயந்து நிற்றல் காண்மின்கள்.

என

இங்ஙனம் நடத்தப்பட்ட பண்டைத் தமிழர்தந் திருமணச் சடங்கைப் பார்த்து, வந்தேறுங் குடிகளான பழைய ஆரியர் அதனைப் போல் தாமுஞ் செய்யப் புகுந்து தம்முடைய பழக்க வழக்கங்களுக்கு ஏற்ப அதனை மாற்றிச் செய்யலாயினர். பண்டைத் தமிழ் மக்களில் மேல் வகுப் பினரெல்லாருங் 'கொல்லாமை' ‘ஊன் உண்ணாமை' என்னும் அருளொழுக்கத் திற் கடைப்பிடியாய் நின்றவர் களாதலால், அவர்களது திருமணச் சடங்கில் உறவினர்க்கும் விருந்தினர்க்கும் பிறர்க்குஞ் சைவவுணவே யல்லாமல் ஊனுணவு வழங்கப்படுவதில்லை. சடங்கியற்றுங் காலங் களில் மேலோ ரொழுக்கத்தையே கைப்பற்றி நடக்குங் கீழோருங்கூடத் திருமணம் நடத்தும் நாட்களில் தாமும் ஊனுணவு மிசைவதில்லை, பிறர்க்கும் அதனைத் தருவ தில்லை; இவ்வொழுகலாற்றினை இன்றைக்குந் தமிழ் மக்களின் எல்லா வகுப்பினரிடத்துங் காணலாம்.

ஆனாற், பழைய ஆரியரோ திருமணநாட்களிலுங் காளை மாடுகளை ஊன் உணவின் பொருட்டுக் கொலை செய்தன ரென்பது, மாசி மகத்தன்று காளைமாடுகளைக் கொன்று விருந்தாட்டயர்ந்து பங்குனியில் அவர்கள் மணச்ச ங்கு நடத்தியதனை விளக்கமாக எடுத்துக்கூறும் இருக்குவேதப் பத்தாம் மண்டிலத்து 85 ஆம் பதிகத்தின் 13ஆஞ் செய்யுளாலும், அதர்வ வேதத்துப் பதினான்காம் மண்டிலத்து முதற் பதிகத்தின் 13ஆஞ் செய்யுளாலும் நன்கறியக் கிடக்கின்றது. அது மட்டுமோ! அவர்கள் அந்நாட்களிலுஞ் சாராயங் குடித்து வெறியாட் டயர்ந்து சூதாடிக் களித்ததூஉம் அப்பதிகங் களினாலேயே அறியப் படுகின்றது. இத்தகைய பொருந்தா ஒழுக்கங்கள் தமிழர் தந் திருமணத்திற் சிறிதும் நிகழாமை மேலைச் செய்யுளினால் நன்கறியப் படுகின்றதன்றோ? திருமண நாட்களில் உழுத்தங் களியும் பெருஞ்சோறும் பண்டைத்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_31.pdf/250&oldid=1592984" இலிருந்து மீள்விக்கப்பட்டது