உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 31.pdf/249

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

224

  • மறைமலையம் - 31

கல்லென் சும்மையர் ஞெரெரெனப் புகுந்து

பேரிற் கிழத்தி யாகெனத் தமர்தர

ஓரிற் கூடிய உடன்புணர் கங்குல்”

ஒரு தலைவியைத் திருமணஞ் செய்துகொண்ட ஒரு தலைமகன் தனக்கு அவள் திருமணஞ்செய்து கொடுக்கப் பட்ட முறையினைப் பின்னர் ஒருகால் அவடன் தோழிக்கு எடுத்துரைத்தமை இச்செய்யுளின்கண் நுவலப்பட்டிருக் கின்றது. “உழுந்து அரைத்த மாவை முதன்மையாகச் சேர்த்துச் செய்த கொழுமையான களியுணவும், மிகுதியாகச் சமைத்த சோற்றுத் திரளையுந் திருமணத்திற்கு வந்தவர் எல்லார்க்கும் ஒரு பக்கத்தே வழங்கப்படா நின்றன; வரிசைப்பட நாட்டிய கால்களின்மேற் கட்டப்பட்ட குளிர்ந்த பெரும் பந்தலின்கீழ் வண்டியில்வந்த ஆற்றுமணல் பரப்பப் பட்டது; வீட்டினிடம் எல்லாம் விளக்குகள் ஏற்றி வைக்கப்பட்டுப்,பன்மலர்மாலைகள் தொடர்ந்து பிணைக்கப்பட்டன: மிகுந்த இருள் நீங்கிய அழகிய விடியற்காலையிலே தீய கோள்கள் நின்ற இடம் நீங்கி வெண்மதி சகடு என்னும் விண்மீனை யணைந்த கெடுதல் இல்லாத சிறந்த நாள் தோன்றா நின்றது; அந்நேரத்தில் தலையின் உச்சியிலே சுமந்த நீர்க்குடத்தினரும், புதிய அகன்ற வாயினையுடை மண்டையென்னும் மட் பாண்டத்தை விளக்கேற்றி ஏந்தினருமாய், ஒருங்கொத்த ஆரவார ஓசையினை விளைக்கும் முதிர்ந்த செவ்வி வாய்ந்த பெண்பாலார், முன் கொடுக்க வேண்டியவைகளையும் பின்கொடுக்க வேண்டியவைகளையும் முறைமுறையே கொடுத்துக்கொண்டிருக்க, ஆண்மகவு பெற்று அழகு தேமல் படர்ந்த வயிற்றினையும் ஒள்ளிய அணிகலன்கள் பூண்ட கோலத்தினையும் உடைய மாதர்கள் நான்குபேர் ஒன்று சேர்ந்து, 'கற்பொழுக்கத்தினின்றும் வழுவாத திட்பம் வாய்ந்தனையாய், அறவோர்க்கு அளித்தலும் அந்தண ரோம்பலுந் துறவோர்க்எதிர்தலும் விருந்தெதிர் கோடலு மாகிய நல்ல பல கடமைகளைச் செய்துகொண்டு, நின்னை மனைவியாகப் பெற்றவனைப் பேணும் மங்கை யாகக் கடவாயாக! என்று வாழ்த்துரை மொழிந்த படியே ஈரந்தோய்ந்த இதழ்களையுடைய அலரிப் பூவையும் நெல்லையும் நீருடன் சொரிந்தமையால், அவை மண மகளின் செழுங்கருங் கூந்தலின் கண்ணே விளங்கா நிற்ப, இங்ஙனம் ஆற்றிய வதுவையாகிய

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_31.pdf/249&oldid=1592983" இலிருந்து மீள்விக்கப்பட்டது