உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 31.pdf/248

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* தமிழர் மதம்

223

இனி, மகளிர்க்குரியார், தம் மகளிரால் விரும்பப்பட்ட காதலர்க்குத் தம் மகளிரை மணஞ்செய்து கொடுக்க ஒருப்படாவழிக், காதலர் இருவரும் பெற்றார் உற்றார் அறியாமே வேற்று நாட்டிற் சென்று தாமே மணஞ்செய்து கொள்ளுதலும் அஞ்ஞான்றை வழக்கமாயிருந்ததென்பது,

“கொடுப்போர் இன்றியுங் கரணம் உண்டே புணர்ந்துடன் போகிய காலை யான

என்று ஆசிரியர் பின்னுங் கிளக்குமாற்றால் தெளியப்படும்.

இனிப், பெற்றாரும் உற்றாருந் தம் மகளிராற் காதலிக்கப் பட்ட ஆடவர்க்கே தம்மகளிரை மணஞ்செய்து கொடுக்க ஓருப்பட்டாற், பெற்றாரும் உறவினருமே முன் நின்று அவரை மணங்கூட்டி வைத்தமையும், அங்ஙனம் மணங் கூட்டியக்கால் அவர் அம் மணத்தை நடத்திய முறையும் அகநானூறு என்னும் பழைய செய்யுட்டொகை நூலின் 86-வது செய்யுளில் விளக்கமாக நுவலப்பட்டிருக் கின்றது; அதுவருமாறு;

“உழுந்துதலைப் பெய்த கொழுங்களி மிதவை பெருஞ்சோற் றமலை நிற்ப, நிறைகாற் றண்பெரும் பந்தர்த் தருமணன் ஞெமிரி, மனைவிளக் குறுத்து, மாலை தொடரிக், கனையிரு ளகன்ற கவின்பெறு காலைக், கோள்கால் நீங்கிய கொடுவெண் டிங்கட் கேடில் விழுப்புகழ் நாள்தலை வந்தென, உச்சிக் குடத்தர் புத்தகல் மண்டையர் பொதுசெய் கம்பலை முதுசெம் பெண்டிர் முன்னவும் பின்னவும் முறைமுறை தரத்தரப் புதல்வற் பயந்த திதலையவ் வயிற்று வாலிழை மகளிர் நால்வர் கூடிக் கற்பினின் வழாஅ நற்பல உதவிப் பெற்றோற் பெட்கும் பிணையை ஆகென நீரொடு சொரிந்த ஈரிதழ் அலரி

பல்லிருங் கதுப்பின் நெல்லொடு தயங்க வதுவை நன்மணங் கழிந்த பின்றைக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_31.pdf/248&oldid=1592982" இலிருந்து மீள்விக்கப்பட்டது