உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 31.pdf/247

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

222

மறைமலையம் - 31

பாடிவைத்தவர் 'சூரியன்' எனப் பெயர் பூண்ட ஒரு திராவிட ஆரியரே யாவரென்பதும் துணியப்படு கின்றன.

ன்னுந், திருமணச் சடங்கை முதன்முதல் வகுத்தவர் தமிழ்முனிவரே யென்னும் உண்மை, இப்போதிருப்பவற்றில் மிகப்பழைய நூலாகிய தொல்காப்பியத்திற் சொல்லப் பட்டிருப்பது கொண்டுந் தெற்றெனத் துணியப்படுகின்றது. அதனை ஒரு சிறிதெடுத்த விளக்கிக் காட்டுவாம். தொல் காப்பியருக்குப் பலநூற்றாண்டுகள் முற்பட்ட காலத் திலெல்லாம், அஃதாவது இற்றைக்கு ஆறாயிர ஆண்டுகட்கு முன்னெல்லாம் பண்டைத் தமிழ் மக்களில் ஆடவரும் பெண்டிரும் ஒருவரையொருவர் எதிர்ப்பட்டுத், தங் காட்சியுங் கருத்தும் ஒன்றுபட்டுத் தமக்குள் ஒருவரை யொருவர் உயிர்போற் காதலிக்குங் காதலன்பு நிகழப்பெற்ற பின் தமக்குள் திருமணஞ் செய்துகொண்டு இனிது வாழ்ந்து வரலாயினர். இது தமிழகத்தில் அன்பினைந்திணைக் காமக்கூட்டம் என்று கூறப்படுமெனவும், இஃது யாழோர் மணம் எனப் பிறநாடுகளில் உள்ளார் ஒரு வகுப்பினராலுங் கைக்கொள்ளப்பட்டு வருவது எனவும் ஆசிரியர் தொல் காப்பியனார்,

"இன்பமும் பொருளும் அறனும் என்றாங்கு அன்பொடு புணர்ந்த ஐந்திணை மருங்கிற்

காமக் கூட்டங் காணுங் காலை

மறையோர் தேஎத்து மன்றல் எட்டனுள்

துறையமை நல்லியாழ்த் துணைமையோ ரியல்பே”

(களவியல் - 1)

என்னும் நூற்பாவில் நன்கெடுத்துக் காட்டியிருக்கின்றார். முதலிற் காதலிற் பிணைந்தார் இருவரையும் மணங்கூட்டு வோர் அவர்தம் பெற்றாருஞ் சுற்றத்தாருமே யல்லால், இக்காலத்திற் போலப் பார்ப்பனக் குருமார் அல்லரென்பது,

"கற்பெனப் படுவது கரணமொடு புணரக் கொளற்குரி மரபிற் கிழவன் கிழத்தியைக்

கொடைக்குரி மரபினோர் கொடுப்பக்கொள் வதுவே'

என்னுங் கற்பியற் சூத்திரத்தில் அவர் கூறுமாற்றால் நன் நறியப்படும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_31.pdf/247&oldid=1592981" இலிருந்து மீள்விக்கப்பட்டது