உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 31.pdf/253

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

228

மறைமலையம் - 31

யினையே ஆசிரியர் தொல்காப்பியனார் களவியல் கற்பியலில் நன்கு விளக்கித் தூயசெந்தமிழ் நூலாகிய தொல்காப்பியப் பொருளோத்தினை அருளிச் செய்தனரன்றி, தமிழரது வாழ்க்கைக்குப் புறம்பான ஆரிய முறை யினையோ அல்லது வேற்றுநாட்டு மக்கள் முறை யினையோ எடுத்து அவற்றிற்கு இலக்கணங் கூறப்புகுந் தாரல்லர். தாங் கூறப் புகுந்த தமிழரின் களவொழுக்கத்தோ டொப்பது பிறநாட்டின் கண்ணும் உண்டென்றும், அஃதங்கே “யாழோர் மன்றல்” எனப் பெயர் பெறுமென்றுங் கூறினாரல்லது, அவ்வியாழோர் மன்றலைப் பற்றி வேறெதுங் கூறினாரல்லர். மேலுந், தமிழரின் கள வொழுக்கத்தோடு ஒப்பது வேற்று நாட்டகத்தும் உண்டென்று கூறிய ஆசிரியர், தமிழரின் கற்பொழுக் கத்தைக் கூறுகின்றுழி அதனோடொப்பது வேற்று நாட்டகத்தும் உண்டென்று கூறாமையால், அவர் காலத்தில் வடக்கேயிருந்த ஆரியர்க் குள்ளும் பிறர்க்குள்ளுங் கற்பொழுக்கம் நடைபெறவில்லை யென்பதே துணிபொருளாம். அஞ்ஞான்றை ஆரியமாந்தர் கற்பொழுக்கத்தை ஒரு பொருட்டாகக் கருதவில்லையென்பது எமது மாணிக்கவாசகர் வரலாறுங் காலமும் என்னும் நூலில் வலிய சான்றுகளுடன் காட்டப்படுகின்றது. (பக்கம் 377 - 380). ஆனாற், றமிழ்மக்களோ தம்மகளிரின் கற்பொழுக் கத்தைத் தம் உயிரினுஞ் சிறந்ததாகப் பாராட்டி வந்தன ரென்பதற்கு,

“உயிரினுஞ் சிறந்தன்று நாணே, நாணினுஞ் செயிர் தீர் காட்சிக் கற்புச் சிறந்தன்றெனத் தொல்லோர் கிளவி புல்லிய நெஞ்சமொடு”

தொல்காப்பியச்

என்னுந் சான்றாமென்க.

சூத்திரமே

(களவியல் -22)

உறுபெருஞ்

ஈதிங்ஙனமாகவுந் திருமணச்சடங்கை திருமணச்சடங்கை உண்டாக்கி அதனாற் றமிழ்மாதர்க்குக் கற்பொழுக்கத்தைக் கற்பித்து வைத்தவர் ஆரியமுனிவர்களேயென ஒரு பார்ப்பனத் தமிழ்ப் புலவர் கூறினார். இவர் இவ்வாறு கூறுதற்கு 'ஐயர்' 'கரணம்' என்னும் இருசொற்களையுங் கருவியாய்க் கொண்ட போலும். இவரது கருத்து ஐயர் என்னுஞ் சொல் ஆரியர் என்னுஞ்சொல்லின் சிதைவு என்பதே போலும். ஆனால், இவர் அங்ஙனங் கருதுதற்குச் சான்றேது முண்டோவெனின்; ஒரு

னர்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_31.pdf/253&oldid=1592987" இலிருந்து மீள்விக்கப்பட்டது