உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 31.pdf/254

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* தமிழர் மதம்

229

சிறிதுமில்லை. ஆரியர் என்னுஞ் சொல்லே தொல்காப்பியத்துள் யாண்டுங் காணப்பட்டதாக, அதன் சிதைவே ஐயர் எனக் கருதுதல் முயற் கொம்பு ஒருசாண் நீளம் உள்ளதெனச் சிலரும் அரைச்சாண் நீளம் ம் உள்ளதென வேறு சிலருங் கூறி வழக்கிடுவதற்கே ஒப்பாயிருக்கின்றது. உண்மையான ஆராயுங் கால், ஐயர் என்னுஞ்சொல் முதலில், “ஐ வியப்பாகும்” என ஆசிரியர் தொல்காப்பியனார் அறிவுறுத்தியாங்கு, “வியக்கத் தக்க குணமுஞ் செயலும் உடைய முனிவரையே" குறிக்குந் தனித்தமிழ்ச் சொல்லாய் வழங்கிற்கு: பின்னர் அஃது ஒரு குடும்பத்திற் றலைவராய்க் குணத்திலுஞ் செயலிலுஞ் சிறந்தாரை யுணர்த்துதற்கு வழங்கலாயிற்று, இஃது, “இளமா இ எயிற்றி இவைகாண் நின் ஐயர்” என்னுஞ் சிலப்பதிகார வேட்டுவரிச் செய்யுளில் அப்பொருள் தந்து வருதலால் நன்கறியப்படும். எனவே, அக்காலத்தில் தமதுயர் குடிப்பிறந்த விடலையரும் மடந்தையருங் காதற் கற்பொழுக்கம் பிழைத்து நடவாமற் பலரறியக் கூடி இல் வாழ்க்கையினை இனிது நடத்தல் வேண்டும் என்பதிற் கண்ணுங்கருத்தும் உடைய குடும்பத் தலைவராலும், அவர்க்குத் துணைநின்ற சான்றோராலுமே திருமணச்சடங்கு வகுக்கப் பட்டதன்றி, வடக்கிலிருந்து போந்து குடியேறிக் காதற்கற்பொழுக்கம் இன்னதென்றே அறியாத ஆ ரிய மாந்தரால் வகுக்கப்பட்டதன்று. தமிழரும் ஆரியருங் கலந்த கலப்பிற்றோன்றிய இஞ்ஞான்றைப் பார்ப்பனர் தம்மைத் தாமே உயர்த்துக்கொள்ளுதல் வேண்டி 'ஐயர்' என்னுஞ் சொல்லைத் தமக்குப் பட்டப்பெயராக வைத்துக் கொண்ட போல, அஞ்ஞான்றிருந்த விண்ணந்தாயன், மாடலன், உருத்திரங் கண்ணன், கபிலன் முதலான பார்ப்பனர் தமிழறிஞராயிருந்தும் அவர் ஐயர் என்னும் பட்டப்பெயரைச் சூடிக்கொண்டார் ார் அல்லர். ஆகவே 'ஐயர்' என்னுஞ் சொற்கொண்டு, தமிழர்க்குத் திருமணச் சடங்கை வகுத்து அவரைக் கற்பொழுக்கத்தில் நிறுத்தினவர்

.

ஆரிய

முனிவரேயென்றும், அங்ஙனம் அவர் வகுத்த ஆரியமணச் சடங்கே 'கரணம்' கரணம்' எனப் பெயர் பெறலாயிற் றென்றும் பார்ப்பனப் புலவர் சிலர் கூறு முறை பொருந்தாவு ரையே யாதல் தெற்றென விளங்காநிற்கும். தொல்காப்பிய நூலுக்கு உரைவகுத்த இளம்பூரணர், நச்சினார்க்கினியர் முதலான

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_31.pdf/254&oldid=1592988" இலிருந்து மீள்விக்கப்பட்டது