உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 31.pdf/256

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* தமிழர் மதம்

231

விளங்கும் ஆசிரியரைக் கொண்டாவது தம் மக்களுக்குத் திருமணத்தை நடத்திவைக்கக் கடமைப்பட்டவரா யிருக்கின்றனர். பார்ப்பனரைக் கொண்டு நடத்திவைக்கும் பிற்காலவழக்கத்தை அறவே ஒழித்து விடல்வேண்டும். தமிழர்கள்தம்மைச் சார்ந்த பார்ப்பனர்க்கு எவ்வளவோ உயர்வு காடுத்து அவர்களைப் L பலவகையிற் பாராட்டியும், பார்ப்பனர், தமிழர் எல்லாரையும் வேசிமக்கள் தொழுத்தைகள் எனப் பொருள்படுஞ் சூத்திரர் என்னும் சொல்லால் அழைத்து இழிவு படுத்தியே வருகின்றனர். அது மட்டுமோ! தமிழர்களைத் தொடுதலும் ஆகாது; அவர் களோடு உண்ணல் கலத்தல்களைச் செய்தலும் ஆகாத என்னுங் கொள்கையில் விடாப்பிடியாய் நின்று, தமிழ ரெல்லாரையுந் தம்மினின்றும் விலக்கியே பார்ப்பன ரெல்லாரும் ஒழுகிவருதலை நேரே கண்டிருந்தும், அவரைத் தமது திருமணச்சடங்கு தென்புலத்தார் வழிபாடு முதலி யவைகளுக்கு ஆசிரியராக வருவித்து வைத்து, அவரது காலில் விழுவதினும் மானக்கேடான செயல் தமிழர்க்கு வேறு வேண்டுமோ சொன்மின்கள்! ஆரியர் முதலான எல்லா மாந்தர்க்கும் பண்டைநாளிலிருந்தே கடவுள் வழிபாடு அருளொழுக்கம் உழவு வாணிகம் அரசியல் கற்புமணம் முதலான நாகரிக நடைகளைக் கற்பித்துக் கொடுத்து அவரெல்லார்க்கும் மேலான விழுமிய இம்மை மறுமை வாழ்க்கையிற் றனியரசு செலுத்திய தமிழர் இஞ்ஞான் று அத்தனிப்பெருஞ் சிறப்பெல்லாம் இழந்து, பார்ப்பனர்க்கு அடிமைகளாகி, அவர்கள் தம்மை வேசிமக்களென அழைக்கவும் ஒருப்பட்டிருப்பது கலிகாலச் செயலோ! கருத்தழிந்த பிழைப்போ! இன்னதென் றறிகிலம். உண்மைத் தமிழராவார் இனி இம்மானங்கெட்ட பிழைப்பை விட்டுத், தம் முன்னோர் சென்ற மானவாழ்க்கை யைப் பின்பற்றி, நன்கினிது வாழ முன்நிற்பாராக!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_31.pdf/256&oldid=1592990" இலிருந்து மீள்விக்கப்பட்டது