உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 31.pdf/257

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

232

29. பழைய திருமணச் சடங்கை இப்போது நடத்தும் முறை

L

இனிப், பந்தரும் வீடும் ஒப்பனைசெய்ய வேண்டும் முறையிற் செய்வித்துப், பண்டைநாட் டமிழர் திருமணம் வெண்டிங்கள் சகடு (உரோகிணி) என்னும் விண்மீனை யணைந்த நாளின் விடியற்காலத்தே நடத்தப்பட்டமையால், இப்போதும் அதேநாளின் வைகறை விடியலில் தமிழரா வார் அனைவருந் தம்மக்கட்குத் திருமணம் நடப்பித்தல் வேண்டும். வேறு நாளுங் கோளும் ஓரையும் பொருத்தமும் பார்த்தல் ஆகாது. திருமணத்தை நடத்தி வைத்தற்குக் கற்றுவல்ல தக்கார் ஒருவரைத் தம்மவரிலிருந்தேனும் பிறரிலிருந்தேனுந் தெரிந்து வைத்துக் கொண்டு அவரது சொற்படி அதனை நடத்துக. விடியற் காலையில் எல்லாம் வல்ல இறைவனைத் தொழுதே இம்மங்கல வினையைத் துவங்கல் வேண்டு மாதலால், நம் சமய முதலாசிரியராகிய மாணிக்கவாசகப் பெருமான்

அருளிச்செய்த,

"கூவின பூங்குயில் கூவின கோழி

குருகுகள் இயம்பின இயம்பின சங்கம் ஓவின தாரகை ஒளியொளி யுதயத்

தொருப்படு கின்றது விருப்பொடு நமக்குத்

தேவநற் செறிகழற் றாளிணை காட்டாய்

திருப்பெருந் துறையுறை சிவபெரு மானே,

யாவரும் அறிவரி யாய்எமக் கெளியாய்

எம்பெரு மான்பள்ளி யெழுந்தரு ளாயே’

என்னும் விடியற்காலை வணக்கச் செய்யுளை மணமகன் மணமகட்குரியார் அனைவரேனும், அல்லதவரிற் சிலர்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_31.pdf/257&oldid=1592991" இலிருந்து மீள்விக்கப்பட்டது