உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 31.pdf/258

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழர் மதம்

233

பலரேனும் ஆசிரியருடன் ஒத்து மெல்லிய குரலில் இனிதாக மிழற்றுதல்வேண்டும்.

அதன்பின் ஒருமங்கை தன் தலைமீது நெல்முதலான வித்துகள் இட்ட நிறைநீர்க்குடஞ் சுமந்தவராயும், மற்றொரு மங்கை அகன்ற அகல்விளக் கேந்தியவராயும் வந்து இணைந்து நிற்கும்படிசெய்க; அங்ஙனம் அவ்விருவரும் வந்து நிற்கும்படி செய்கையில்,

“முத்துநற் றாமம்பூ மாலைதூக்கி

முளைக்குடந் தூபநற் றீபம்வைம்மின் சத்தியுஞ் சோமியும் பார்மகளும்

நாமக ளோடுபல் லாண்டிசைமின் சித்தியுங் கௌரியும் பார்ப்பதியுங் கங்கையும் வந்து கவரிகொண்மின் அத்தன்ஐ யாறன்அம் மானைப்பாடி ஆடப்பொற் சுண்ணம் இடித்துநாமே

என்னுந் திருவாசகச் செய்யுளை ஓதுக.

அதன்பின் ஆண்மகப் பெற்ற மாதரார் நால்வர், நீராட்டிப் புத்தாடை அணிகலம் பூட்டி மலர்மாலை சூட்டப் பட்ட மணமகன் L மணமகளைப் பந்தரிற் கொணர்ந்து, நிறை நீர்க்குடமும் அகல்விளக்கும் ஏந்தி நிற்கும் மங்கையர் இருவர் எதிரே அவரை நிறுத்தி, மணமக்கள் அவ்விருவர் மேலும் மலர்தூவி வழிபடுமாறு செய்க; அவ்வாறவர் செய்கையிற்,

“பேதம் இல்லதோர் கற்ப ளித்த பெருந்து றைப்பெரு வெள்ளமே ஏத மேபல பேச நீயெனை

ஏதி லார்முனம் என்செய்தாய் சாதல் சாதல்பொல் லாமை யற்ற தனிச்ச ரண்சர ணாமெனக் காத லால்உனை யோத நீவந்து

காட்டி னாய்கழுக் குன்றிலே”

என்னுந் திருவாசகச் செய்யுளை அவரும் பிறரும் ஓதுமாறு செய்க. இங்ஙனஞ் செய்யும் வழிபாட்டின் கருத்து என்னை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_31.pdf/258&oldid=1592992" இலிருந்து மீள்விக்கப்பட்டது