உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 31.pdf/259

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

234

-

மறைமலையம் - 31 ×

யென்றால், நிறைநீர்க் குடமானது எல்லாவுயிர்க்குந் தாயாகிய உமைப்பிராட்டிக்கு அடையாளமாகும்; அகல் விளக்கானது எல்லாவுயிர்க்குந் தந்தையாகிய சிவபிரானுக்கு அடையாள மாகும். நீரின்றன்மையானது குளிர்ந்த அருட்பெருங் களஞ்சியமான அ அம்மையினியல்பை ஒப்ப தென்றும், அகல்விளக்கி லெரியுந் தீச்சுடரானது ஒளி வடி வினனான அப்பனியல்பை ஒப்பதென்றும் முன்னரே விளக்கிக் காட்டினாம். அம்மையும் அப்பனுஞ் சேர்ந்த சேர்க்கை யினாலேயே இவ்வுலகுயிர்கள் அத்தனையுந் தோன்றி அறிவும் இன்பமும் மேன்மேற் பெருகி வாழுமாறு போல், பெண்ணும் ஆணுமாகிய மணமகளும், மணமகனும் அவரது திரு வருளியக்கத்தாற் காதலன்பிற் பிணைந்து, தம்போல் இறைவனுதவியாற் பிறவிக்கு வர வேண்டிய சில உயிர்களைத் தம்மினின்றுந் தோற்றுவித்து, அவ்வாற்றால் இறைவனது அருட்பெருஞ் செயலுக்குத் தாமும் ஒரு சிறு கருவியாயிருந்து தவித் தமது பிறவியைப் புனிதமாக்கிக் கொள்ளுதலை வேண்டிச் செய்வதே அவ்வழிபாட்டின் கருத்தாகும். நிறைநீர்க் குடத்தில் இடப்படும் நெல் முதலான வித்துகள், அப்பனது சேர்க்கையால் அம்மையின் அகட்டி னின்றும் உண்டாக இருக்கும் உயிர்களுக்கு அடையாள மாகும். அங்ஙனமே தன் காதலனது சேர்க்கையால் மண மகளுந் தன் னகட்டி னின்றும் மக்கள் பலரைப் பிறவிக்குக் கொண்டுவரல் வேண்டுமென்பதும் அதனாற் போதரும் உள்ளுறை பொருளாகும். ஆசிரியர் திருவள்ளுவ நாயனாரும்,

“மங்கலம் என்ப மனைமாட்சி மற்றதன் நன்கலம் நன்மக்கட் பேறு”

என்று அருளிச்செய்தன ரன்றோ?

(குறள் 60)

மேற் சொல்லியவாறு அம்மையப்பர் வழிபாடு நடந்த பின், அம்மையப்பரெதிரே ஒரு தட்டத்திற் பூ மஞ்சள் திருநீறு குங்குமத்துடன் தாலி கோத்துவைத்த மங்கல நாணை ஆசிரியன் அம்மாதரார் நால்வர் கையில் எடுத்துக் கொடுக்க, அவரதனை மணமகன் கையிற் கொடுக்க மணமகன் அதனை மணமகள் கழுத்திற் பூட்டல் வேண்டும்; அப்போது அம் மாதரார் நால்வரும்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_31.pdf/259&oldid=1592993" இலிருந்து மீள்விக்கப்பட்டது