உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 31.pdf/260

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* தமிழர் மதம்

“கற்பினின் வழாஅ நற்பல உதவிப், பெற்றோற் பெட்கும் பிணையை ஆகுக!”

235

என வாழ்த்தி நீரும் பூவும் நெல்லொடு சேர்த்து மணமகள் கூந்தன்மேற் சிதறல்வேண்டும். அதன்பிற், பெற்றார் சுற்றத்தார் நண்பர் முதலாயினாரெல்லாரும் மஞ்சளரிசியும் பூவுங் கையில் ஏந்திக்,

66

காதலற் பிரியாமே கவவுக்கை நெகிழாமே அறவோர்க் களித்தும் அந்தணர் ஓம்பியுந் துறவோர்க் கெதிர்ந்துந் தொல்லோர் சிறப்பின்

விருந்தெதிர் கொண்டும் வியன்றமிழ் வளர்த்தும் அம்மை யப்பரை அடிபணிந் தேத்தியும் நன்மகப் பயந்து பொன்வளம் பெற்று ஊழி யூழியும் வாழியர் பெரிதே!”

என வாழ்த்தி மணமகள் மணமகன் மேல் அவற்றைத் தூவுக.

அதன்பின், மணமக்கள் இருவரும் ஆசிரியனையும் பெற்றார் சுற்றத்தார் நண்பர் முதலான எல்லாரையும் வணங்கிய பின், அவரை மணப்பந்தரி னின்றும் அழைத் துப்போய், ஒரு தனியிடத்தில் அமர்த்தி, அவ்விருவரும் அருந்தப் பாலும் பழமுந்

தருக.

அதன்பின், திருமணத்திற்கு வந்தார் அனைவர்க்குங் காலையிற் சிற்றுண்டியும், பின்னர்த் தீஞ்சுவை யுணவும் வழங்குக.

அதன்பின், மாலையில் மணமக்களைத் திருமணப் பந்தரிற் கொணர்ந்து அமர்வித்து, எல்லாரும் ஒருங்கு குழுமி அவர்க்கு வாழ்த்துரை பகர்ந்து, இசைவல்லாரை வருவித்து வைத்துத், தேவார இசையரங்கு நடாத்தி, எல்லாரும் இறைவன் மேலதான இன்னிசை கேட்டு மகிழ்க.

அதன்பின், இராப்பொழுதில்

உண்டாட்டு நடந்

தேறியபின், மணமகளைப் பெற்றாரும் அவர்க்கு மிக நெருங்கிய உறவினர் சிலரும் மணமகளைக் கொணர்ந்து மணமகனிடஞ் சேர்ப்பித்து,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_31.pdf/260&oldid=1592994" இலிருந்து மீள்விக்கப்பட்டது