உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 31.pdf/261

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

236

66

மறைமலையம் - 31

"ஆனந்த வெள்ளத் தழுந்துமொ ராருயிர் ஈருருக்கொண்

டானந்த வெள்ளத் திடைத்திளைத் தாலொக்கும் அம்பலஞ்சேர் ஆனந்த வெள்ளத் தறைகழ லோன்அருள் பெற்றவரின் ஆனந்த வெள்ளம்வற் றாதுமுற் றாதிவ் வணிநிலமே”

என்னுந் திருச்சிற்றம்பலக்கோவையார் திருப்பாட்டையும்,

“மண்ணின்நல் லவண்ணம் வாழலாம் வைகலும் எண்ணின்நல் லகதிக்கி யாதுமோர் குறைவிலை, கண்ணினல் லஃதுறுங் கழுமல வளநகர்ப் பெண்ணினல் லாளொடும் பெருந்தகை யிருந்ததே”

என்னுந்

திருஞானசம்பந்தப்

பாட்டையும்,

பெருமான்றன்

றிருப்

“பொன்னு மெய்ப்பொரு ளுந்தரு வானைப்

போக முந்திரு வும்புணர்ப் பானைப் பின்னை யென்பிழை யைப்பொறுப் பானைப்

பிழையெ லாந்தவி ரப்பணிப் பானை இன்ன தன்மைய னென்றறி யொண்ணா எம்மா னைஎளி வந்தபி ரானை அன்னம் வைகும்வ யற்பழ னத்தணி

ஆரூ ரானை மறக்கலு மாமே

என்னுஞ் சுந்தரமூர்த்தி நாயனார் திருப்பாட்டையும் ஓதிப் “பேர் இற்கிழத்தி ஆகென வாழ்த்தி, அவ்விருவரும் ஒருங்குகூடிக் காதலின்பம் நுகர்ந்து துயில் கொள்ளுமாறு செய்து திருமண வினையை நிறைவு செய்திடுக.

இங்ஙனமாகப் பண்டைத் தமிழர்தந் திருமணச் சடங்கைப் பண்டைமுறைப்படி மணமக்களின் தமரைக் காண்டே மேற்காட்டியவாறு செய்துவைத்தல் தமிழ் மக்களனைவர்க்கும் இன்றியமையாத கடமையாமென்க.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_31.pdf/261&oldid=1592995" இலிருந்து மீள்விக்கப்பட்டது