உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 31.pdf/262

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

237

30. திருமண வேள்விச் சடங்கு

இனி, ஒளி வடிவினனாகிய இறைவனை ஞாயிறு திங்கள்

L

தீ யென்னும் ஒளியுடைப் பொருள்களில் வைத்துச் செய்யும் தீ வழிபாட்டை முதன்முதற் கண்டறிந்தவர்கள் பண்டைத் தமிழ் மக்களே யாவர் என்னும் உண்மையினை மேலே விரித்து விளக்கி யிருக்கின்றேம். அவ்வுண்மையைக் கண்டறிந்தபின், ஞாயிறு திங்கள் தீ யென்னும் மூன்றும், அனற்பிழம்பே யாதலால், அம்மூன்றையும் அனல் வடிவில் அருகே வைத்து, அன்பிற் கடையாளம் ஆவனவெல்லாஞ் செய்து வழிபடுதலிற் பெருவிழைவு கொண்ட தமிழ்ச் சான்றோர் பண்டை நாளிலேயே முத்தீ வேள்வி வேட்டு இறைவனை வழிபட்டு வரலாயினர். இது, பாண்டவருந் துரியோதனன் முதலியோரும் போர் செய்த வழி அவ் விருவரது படைக்கும் பெருஞ்சோறு வழங்கிய உதியஞ் சேரலாதனை முரஞ்சியூர் முடிநாகராயர் என்னும் நல்லிசைப் புலவர் பாடிய ஐயாயிர ஆண்டுகளுக்கு முற்பட்ட மிகப் பழைய செய்யுளாகிய “மண்டிணிந்த நிலனும் என்பதன்கட்,

66

“சிறுதலை நவ்விப் பெருங்கண் மாப்பிணை

அந்தி யந்தணர் அருங்கடன் இறுக்கும் முத்தீ விளக்கிற் றுஞ்சும்

பொற்கோட் டிமயமும் பொதியமும் போன்றே”

(புறநானூறு,2)

எனப் போந்த பகுதியால் நன்கு விளங்கா நிற்கும். தமிழ் நாட்டு அந்தணர் செய்து போந்த இம் முத்தீ வேள்வி யினையே, பின்னர்த் திராவிட ஆரியராகிய பார்ப்பனர் தமக்குரியதாக் கைக்கொண்டு, அவ்வேள்விக்கண் எருத்து மாடுகளைக் கொன்று அவற்றை வேட்கலாயினர். தமிழந்தணர் வேட்ட முத்தீவேள்வி உயிர்க்கொலை இல்லாதது; இறைவன் வழிபாடு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_31.pdf/262&oldid=1592996" இலிருந்து மீள்விக்கப்பட்டது