உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 31.pdf/264

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* தமிழர் மதம்

239

என்னுஞ் சிலப்பதிகார ‘மங்கலவாழ்த்துப்பாடற்' பகுதியால் தெற்றெனப் புலனாகின்றதன்றோ? தி.பி. இரண்டாம் நூற்றாண்டின் ஈற்றில் இயற்றப்பட்ட சிலப்பதிகாரத்தும் அதற்குப் பிற்பட்ட நூல்களிலுமே திராவிட ஆரியப் பார்ப்பனர் தமிழ்ச்செல்வர் குடியிற் றிருமணம் நடத்தி வைத்த நிகழ்ச்சி சொல்லப்பட்டிருக்கின்றது. மற்றுச், சிலப்பதிகாரத்திற்கு முற்பட்ட நூல்களிலோ பார்ப்பனர் செய்துவைத்த திருமண ஒருசிறிதுங் குறிக்கப்பட வில்லை. முன்னே

நிகழ்ச்சி

அகநானூற்றுச் செய்யுளில் நுவலப்பட்ட வண்ணம் மணமக்களின் பெற்றாரும் உற்றாரும் அவர்தந் திருமணத்தை நடத்தும் முறையே இற்றைக்கு இரண்டாயிர ஆண்டுகளுக்கு முற்பட்ட பழைய காலத்திற் றமிழ் மக்களாற் கையாளப்பட்டு வந்தமை நினைவிற் பதிக்கற் பாற்று.

அங்ஙனந் திராவிட ஆரியப்பார்ப்பனர், தமிழர்க்குரிய முத்தீ வழிபாட்டை நுழைத்துத் தமிழ்ச்செல்வர் தந் திருமணத்தை நடத்தியவழி, பண்டைத் தமிழர்தந் திருமண முறையினை முற்றும் மாற்றிவிட இயலாமல், அதிற் பெரும் பகுதியைத் தாந் தழுவிக்கொண்டு, தமக்குரிய சிலவற்றை மட்டும் அதிற் புதிது புகுத்தி அதனைச் செய்துவரலாயினர். தூண்களை வரிசையாக நிறுத்திச் சமைத்த பந்தரிற் பூமாலை களைத் தொடர்ந்துகட்டி ஒப்பனை செய்து அதன்கீழ்ப் பண்டைத் தமிழர் தந் திருமணத்தை நடத்தினாற்போலவே, சிலப்பதிகார காலத்துத் தமிழர்களுந் திருமணம் நடத்தினமை,

66

மாலைதாழ் சென்னி வைரமணித் தூணகத்து

நீல விதானத்து நித்திலப்பூம் பந்தர்க்கீழ்”

என அந்நூல் நுவலுமாற்றால் அறியப்படும். இங்ஙனமே இன்றுகாறுந் தமிழர்தந் திருமணம் பந்தர்க்கீழ் நடைபெற்று வருதல் யாவரும் அறிந்ததேயாகும். இன்னும், நந்தமிழ் முன்னோர் முழுமதியானது சகடு என்னும் வான் மீனை யணைந்தநாளிலே திருமணம் நடத்தியவாறு போலவே, சிலப்பதிகார காலத்துத் தமிழ்மக்களும் அதனை நடத்தி வந்தமை “வானூர் மதியஞ் சகடு அணைய” என அந்நூல் கூறுமாற்றால் இனிது விளங்கா நிற்கும். பழந் தமிழர் அம்மையப்பர் வழிபாட்டிற்கு அடையாளமாக நிறைநீர்க்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_31.pdf/264&oldid=1592998" இலிருந்து மீள்விக்கப்பட்டது